வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (29/04/2017)

கடைசி தொடர்பு:16:24 (29/04/2017)

இந்தியச் சந்தையைக் குறிவைத்து அப்டேட்கள்... கூகுளின் இந்தியப் பாசம்!

இந்தியச் சந்தையைக் குறிவைத்து, கூகுள் பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வந்தது. தற்போது, ’கூகுள் மேம்ஸ்’ புதிய அப்டேட் உடன் வெளியாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய தேடல் நிறுவனமான கூகுள், இந்தியாவின் டிஜிட்டல் சந்தையைக் குறிவைத்து, தனது தயாரிப்புகளில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகிறது. குறைந்த இணைய வேகத்தில் வீடியோக்களைப் பார்க்கும் விதமாக, தனது யூடியூப் அப்ளிகேஷனில் மாற்றங்களைச் செய்து, ’யூடியூப்-கோ’ என்ற லைட் வெர்சன் அப்ளிகேஷன் ஒன்றைத் தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியப் பிராந்திய மொழிகளையும் மொழிமாற்றம்செய்யும் வகையில், கூகுள் ட்ரான்ஸ்லேட்டில் சில மேம்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கூகுள் மேப்ஸ்

இந்த நிலையில், குறைவான இணைய வேகத்திலும் சிறப்பாக இயங்கும் வகையில், தனது மேப்ஸ் அப்ளிகேஷனில் சில மாற்றங்களைச் செய்துள்ளது கூகுள். இந்தப் புதிய அப்டேட்டில், ஒரே திரையில் பல்வேறு ஆப்ஷன்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பயனாளர் தனது விருப்பத்துக்கு ஏற்ப, திரையின் கீழ் உள்ள டூல் பாரில் ஆப்ஷன்களைச் சேர்த்துக்கொள்ள முடியும். மேலும், ஆஃப்லைனில் மேப்பை டவுண்லோடுசெய்துகொள்ளும் ஆப்ஷன், ஒவ்வொரு திரையிலும் சேர்க்கப்பட்டிருக்கிறது. மேப்பை ஆஃப்லைனில் டவுண்லோடு செய்வதன்மூலம், இணையம் இல்லாத நேரத்திலும் இணைய வேகம் குறைவான நேரத்திலும், சேமித்து வைக்கப்பட்ட மேப்பை பயனாளர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனாளர்கள், இந்தப் புதிய அப்டேட்டுடன்கூடிய கூகுள் மேப்ஸ் அப்ளிகேஷனை, கூகுள் ப்ளே ஸ்டோரில் டவுண்லோடு அல்லது அப்டேட் செய்துகொள்ள முடியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க