இந்திய மாணவிக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளித்தது நாசா!

சிறந்த விண்கலம் வடிவமைப்பிற்காக, இந்திய மாணவி தபஸ்வினி, நாசாவின் சர்வதேச விண்வெளி வளர்ச்சி மாநாட்டில் பங்குபெற அழைக்கப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் நடந்த நாசா போட்டியில் வென்றதற்காக, இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நாசா விருது

பூனே நகரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி தபஸ்வினி ஷர்மா, நாசா நடத்திய சர்வதேச விண்கலம் வடிவமைக்கும் போட்டியில் பட்டம் வென்றுள்ளார். சர்வதேச அளவில் நடந்த இந்த விண்கலம் வடிவமைக்கும் போட்டியில், 6,000 போட்டியாளர்களை வென்று இந்தப் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார், தபஸ்வினி ஷர்மா. 

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் மாகாணத்தில் நடைபெற இருக்கும் நாசாவின் 36-வது சர்வதேச விண்வெளி வளர்ச்சி மாநாட்டில் பங்கேற்க, சிறப்புப் பார்வையாளராக அழைக்கப்பட்டுள்ளார் தபஸ்வினி. ‘Kirithra Orbis’ எனப் பெயரிடப்பட்டுள்ள விண்கலம், தேன்கூடு வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பே, தனிநபர் விண்கல வடிவமைப்பாளர் பிரிவில் தபஸ்வினிக்கு விருதைப் பெற்றுத்தந்துள்ளது. 

இதுகுறித்து, அந்த மாணவி கூறுகையில், ‘நாசாவின் இணையதளப் பக்கத்தை எதார்த்தமாகப் பார்த்தபோது, இந்தப் போட்டிகுறித்து அறிந்துகொண்டேன். பள்ளியின் துணையுடனும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலாலும் உலக அளவில் நடந்த இந்தப் போட்டியில் முதல் பரிசு வெல்லமுடிந்தது’ என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!