இவ்வளவு குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போனா??? அசர வைக்கும் ஜியோ!!

இலவச வாய்ஸ் கால், இன்டர்நெட் என தொலைத்தொடர்பு உலகை அசர வைத்துக் கொண்டிருக்கும் ஜியோ, தற்போது மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது.

Jio Smartphone
 

ரிலையன்ஸ் ஜியோ தற்போது வழங்கி வரும் சேவையை,  4G - VoLTE வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களில் தான் முழுமையாக பயன்படுத்த முடியும். எனவே  4G - VoLTE வசதி கொண்ட ஸ்மார்ட் போனை 1500 ரூபாய்க்கு அறிமுகம் செய்ய உள்ளதாக பிரபல ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மலிவு விலை ஸ்மார்ட்போன் தயாரிப்புக்காக சீன நிறுவனத்துடன் கைகோத்துள்ளதாம் ஜியோ. புதிதாக அறிமுகமாக உள்ள இந்த ஜியோ போன்களில் இலவச வாய்ஸ் கால் மட்டுமே பெற முடியுமாம். ஜியோவின் இன்டர்நெட் சலுகைகளைப் பெற முடியாதாம். இந்த ஸ்மார்ட்போன் குறித்து ஜியோ விளம்பரம் செய்யத் தொடங்கிவிட்டது. ஆனாலும் போன் பற்றிய முழு விவரம் இன்னும் வெளிவரவில்லை!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!