வெளியிடப்பட்ட நேரம்: 12:57 (06/05/2017)

கடைசி தொடர்பு:13:55 (06/05/2017)

ஸ்மார்ட்போனை பையில் வைத்தால்போதும் அதுவே வழிகாட்டும்! அசத்தும் Levi's ஆடை வடிவமைப்பு

உலகின் முன்னணி ஆடை நிறுவனமான Levi's, ஸ்மார்ட் ஆடைகளை வடிவமைத்துள்ளது. ’Smart Denim' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆடைகளில், ப்ளூ டூத் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. நமது ஸ்மார்ட் போனை ஸ்மார்ட் ஆடையின் பாக்கெட்டில் வைத்து, அப்படியே இயக்க முடியும். இதனைத் தொடுதிரைக் கட்டுப்பாட்டுத் திறன்களுடைய ( touch-screen control) ஆடைகள் என்று சொல்லலாம்.

 

ஆடைகளில் தொழில்நுட்பத்தைப் பொருத்தும் இந்தத் திட்டத்துக்கு,  கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நிறுவனம் மும்முரம் காட்டி வந்தது. தற்போது, ஸ்மார்ட் ஆடைகளுக்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. Levi's நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், இளைஞர் ஒருவர் அடர் நீல டெனிம் ட்ரக்கர் ஜாக்கெட்டை அணிந்துகொள்கிறார். ஜாக்கெட்டின் பாக்கெட்டில் ஸ்மார்ட் போனை வைத்து, ஒரு காதில் மட்டும் ஹெட்போன் மாட்டிக்கொள்கிறார். சான்பிரான்சிஸ்கோ தெருக்களில் தனது சைக்கிளில் பயணிக்கும் அவர், அவ்வப்போது தனது ஜாக்கெட்டின் இடது கைகள் மீது தனது வலது கையைத் தட்டுகிறார். அதாவது, அவர் தனது ஜாக்கெட் வாயிலாக தனது ஸ்மார்ட்போனை இயக்குகிறார். அந்த இளைஞர் போகவேண்டிய இடத்தின் திசையை ஹெட்போனின் உதவியோடு வழிநடத்துகிறது ஸ்மார்ட்போன். மேலும் தகவல்களுக்கு, இந்த வீடியோவைப் பார்க்கவும்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க