பழசு, ஆனா புதுசு! மீண்டும் கலக்க வருகிறது நோக்கியா 3310

பல நாள் காத்திருப்புக்குப் பின்னர், நோக்கியாவின் 3310 மாடல் மொபைல் போன்கள் விரைவில் சந்தைகளில் கலக்க வருகிறது.

நோக்கியா

நோக்கியாவின் பழைய 3310 மாடலை மீண்டும் விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதாக, மொபைல் வேர்ல்டு காங்கிரஸில் அறிவித்திருந்தது நோக்கியா. மொபைல் வேர்ல்டு காங்கிரஸில் அறிமுகம்செய்யப்பட்ட மற்ற மொபைல்களைவிடவும் அதிக கவனம் ஈர்த்தது, இந்த மொபைல்தான். ஆனால், எப்போது விற்பனைக்கு வரும் என்ற விவரங்களை நோக்கியா நிறுவனம் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், நேற்று இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்த நிறுவனம், '17 வருட காத்திருப்பு முடிந்துவிட்டது. மொபைல்களை சந்தைக்கு அனுப்பும் பணிகள் துவங்கிவிட்டன' என ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 

மேலும், இது எப்போது கிடைக்கும் என கமென்ட்டில் கேட்ட ரசிகர்களுக்கு, 'இன்னும் சில மாதங்களில் எங்கள் போன்களை வெளியிடுவோம். மே மற்றும் ஜூன் மாதங்களில் எங்கள் தயாரிப்புகள் வெளியிடப்படும். மேலும் தகவல்களுக்கு, எங்களோடு இணைந்திருங்கள்' எனப் பதில் அளித்துள்ளது நோக்கியா. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!