வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (11/05/2017)

கடைசி தொடர்பு:12:35 (11/05/2017)

விவேகம் டீஸரின் டிஜிட்டல் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் என்ன தெரியுமா?

விவேகம்

அஜித்குமார் நடித்து வெளிவர இருக்கும் விவேகம் படத்தின் டீஸர் நேற்றிரவு வெளியானது வெளியான 10 மணி நேரத்தில் விவேகம் டீஸர் பல சாதனைகளை உடைத்தெறிந்தது. டீஸர் செம வைரல் என்பதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். படம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் பார்த்த காலமெல்லாம் பழசு...இப்போது டீஸர் ட்ரைலரில் யார் ஹிட் அடிக்கிறார்கள் என்பதில் தான் ரசிகர்களின் கொண்டாட்டம் இருக்கிறது.

தல-தளபதி ரசிகர்களின் ஆன்லைன் போர் ஓயாமல் இருந்து வருகிறது. அஜித்தின் வேதாளம் டீஸர் தான் மாஸ் ஹிட் அடித்தது. அதனை விஜய்யின் தெறி டீஸர் ப்ரேக் செய்தது. இந்த தல - தளபதி ரேஸுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கபாலி டீஸர் கிங் ஆஃப் யூ-ட்யூப் என கெத்தாக வைரல் ஆனது,

தற்போது இந்த சாதனைகளை அஜித்தின் விவேகம் டீஸர்  முறியடித்துள்ளது. டீஸர் வெளியான 10 மணி நேரத்தில் 2 மில்லியன் பேர் இந்த டீஸரை பார்த்துள்ளனர். மேலும் 2 லட்சம் லைக்குகளையும் யூ-ட்யூபில் பெற்றுள்ளது. கபாலி டீஸர் ஒரு லட்சம் லைக்குகளை பெற 90 நிமிடங்கள் ஆனது. ஆனால் விவேகம் டீஸர் 50 நிமிடத்தில் இந்த சாதனையை உடைத்துள்ளது. 

இது மட்டுமின்றி சர்வதேச ட்ரெண்டில் சில மணி நேரமும், இந்தியா ட்ரெண்டில் #Vivegam #NeverEverGiveUp போன்ற ஹேஷ்டேக்குகள் மாஸ் காட்டியுள்ளன. மொத்தம் 7 மில்லியன் பார்வையாளர்களை இந்த ஹேஷ்டேக் சென்றடைந்துள்ளது. 

கூகுள் தேடலில் விவேகம் டீஸர் என்ற வார்த்தை இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தேடப்பட்டுள்ளது. இந்தியாவில் கபாலி, தெறி டீஸர் வெளியான அன்று கூகுள் தேடலில் அந்த படங்களின் டீஸர் தேடப்பட்ட அளவை விட விவேகம் டீஸரின் அளவு குறைவு தான் என்றாலும் யூ-ட்யூப் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்துள்ளது விவேகம்.

”டீஸருக்கே இப்படின்னா ட்ரெய்லர் என்னகுமோ” என சிலாகிக்கிறார்கள் நெட்டிசன்கள். ஆனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இணைய பயன்பாட்டாளர்கள் தான் இந்த நம்பர் போருக்கு காரணம் என்பது தான் உண்மை... இதனை நாளை ஒரு விஜய் டீஸர் முறியடிக்கலாம், ரஜினி டீசர் அதை முறியடிக்கலாம்...வெற்றி என்பது இங்கு படங்களுக்கு அல்ல தொழில்நுட்பத்துக்கு தான்...

விவேகம் டீஸர் வெளியாகி 10 மணிநேர சாதனைகள் தான் இது இன்னமும் இருக்கிறது #NeverEverGiveUp என்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.


டிரெண்டிங் @ விகடன்