வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (16/05/2017)

கடைசி தொடர்பு:10:09 (16/05/2017)

மொபைல் கிரிக்கெட்: இந்த ஆறு கேம் ஆப்ஸும் ஆஸம்! #MobileGames

கிரிக்கெட்

ஐ.பி.எல் பீக் டைமை எட்டிவிட்டது. இன்னும் சில நாட்களில் ஐ.பி.எல் முடிந்துவிடும். தொடர்ந்து பல தொடர்கள் இருந்தாலும், தினம் தினம் மேட்ச் பார்க்கும் சுவாரஸ்யம் அப்போது கிடைக்காது. அதனால் என்ன? மொபைலை எடுங்க. இந்த 6 கிரிக்கெட் கேமை ஒவ்வொன்றாக இன்ஸ்டால் செய்து விளையாடுங்க. 

Real Cricket 16
ரொம்ப சிம்பிள் ஆன கேம். ஆனால், கிராபிக்ஸ் கலக்கல் ரகம். ஆண்ட்ராய்டில் கோடிக்கணக்கான டவுன்லோடுடன் 4.2 ரேட்டிங் வாங்கியிருக்கிறது இந்த ஆப். 90 எம்.பி தான் என்பதால் எல்லா மாடல் யூஸர்களும் நம்பி டவுன்லோடு செய்யலாம்.

டவுன்லோடு செய்ய

Cricket T20 Fever 3D
3டி மொபைல் வைத்திருக்கிறீர்களா? அப்ப உடனே டவுன்லோடு செய்துவிடலாம். ஒருநாள் போட்டி, டி20 என பல தொடர்கள் உண்டு. நிஜம் போன்ற கிராஃபிக்ஸ்தான் இதன் பலம். விக்கெட் எடுத்தால், பவுண்டரி அடித்தால் சியர் கேர்ளஸ் ஆட்டம் எக்ஸ்ட்ரா. 

டவுன்லோடு செய்ய

Beach Cricket

பீச் கிரிக்கெட்

எல்லா விதிகளும் அதேதான். ஆனால், மேட்ச் மட்டும் பீச்சில் நடக்கும். வெஸ்ட் இண்டீஸ்க்கு போய் கிரிக்கெட் ஆடுவதெல்லாம் இப்போதைக்கு முடியாது என்பவர்கள், இங்கே விளையாடலாம். செம ஃபன் ஆன கேம் இது. 

டவுன்லோடு செய்ய

World Cricket Championship Lt

கிரிக்கெட்

இது ஒரு டீம் கேம். ஆன்லைன் நண்பர்களுடன் மேட்ச் ஆடலாம். சேலஞ்ச் செய்யலாம். ஃபேண்டஸி லீகு கூட விளையாடலாம். இன்னொரு ஹைலைட் உண்டு. சிக்ஸர் அடித்துவிட்டால், அதை ஸ்லோ மோஷனில் பார்த்து ரசிக்கலாம். கமெண்ட்ரியும் அசத்தல்.

டவுன்லோடு செய்ய

Cricket WorldCup Fever
கிராபிக்ஸ் விஷயத்தில் மற்ற கிரிக்கெட் கேம்களை விட இது ஒரு படி மேலே. ரியல் ஆட்கள் மட்டுமில்லாமல், உண்மையான ஸ்டேடியம் உணர்வையும் கொடுக்கிறது. ஸ்டேடியம், ஃபார்மெட், மற்ற செட்டிங்ஸ் எல்லாம் நமக்கு ஏற்றது போல மாற்றி வைத்துக் கொள்ளலாம். மொத்தம் 6 ஸ்டேடியங்கள், 14 அணிகள் மற்றும் மூன்று டிஃபிகல்டி லெவல்கள் உண்டு,

டவுன்லோடு செய்ய

Cricket Unlimited 2016
ஐ.பி.எல், டி20, ஒருநாள் போட்டிகள் என பல ஆட்டங்கள் உண்டு. நாம் விரும்பும் திசையில் ஸ்வைப் செய்தால் போதும். பந்து பறக்கும். எளிமையான கண்ட்ரோல்கள் இதன் சிறப்பம்சம். தோனியின் ஹெலிகாப்டர் ஷாட், ஸ்கூப் ஷாட் என 24 வகையான ஷாட்கள் உண்டு. இந்த ஆப்பிலும் சியர் கேர்ள்ஸ் உண்டு.

டவுன்லோடு செய்ய

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்