உலகை அதிரவைத்துள்ள ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் வடகொரியாவின் திட்டமா? | North korea suspected over ransomware virus attack

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (16/05/2017)

கடைசி தொடர்பு:16:40 (16/05/2017)

உலகை அதிரவைத்துள்ள ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் வடகொரியாவின் திட்டமா?

ரேன்சம்வேர் வைரஸ் மூலம் மிரட்டிப் பணம் பறிக்கும் தாக்குதலை வடகொரியா ஏவியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

virus

நமது கணினிகளில் உள்ள முக்கியத் தகவல்களை எடுத்து வைத்துக்கொண்டு, மிரட்டிப் பணம் பறிக்கும் தாக்குதல்தான் ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல். கடந்த வெள்ளிக்கிழமை முதல் ரேன்சம்வேர் வைரஸ் உலகம் முழுவதும் உள்ள கணினிகளைத் தாக்கி வருகிறது. 100க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே புதிதாக ஏவப்பட்டுள்ள ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலுக்கு வடகொரியாதான் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த வைரஸை உருவாக்க பயன்படுத்தப்பட்டுள்ள கணினி குறியீடுகள் வடகொரியா பயன்படுத்தும் குறியீடுகளை ஒத்து இருப்பதாக தொழில்நுட்ப நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், இதுவரை நடந்த ரேன்ஸம்வேர் தாக்குதல்களில் இந்த தாக்குதலே பெரியது எனவும் நிபுணர்களின் தரப்பில் கூறப்படுகிறது.