புதிய ஓ.எஸ், கூகுள் VR, ஆண்ட்ராய்டு ஓ... என்னென்ன ஆச்சர்யங்கள் தரவிருக்கிறார் சுந்தர்பிச்சை? #GoogleIO | What to expect from the Google I/O 2017 developer conference

வெளியிடப்பட்ட நேரம்: 20:02 (17/05/2017)

கடைசி தொடர்பு:20:01 (17/05/2017)

புதிய ஓ.எஸ், கூகுள் VR, ஆண்ட்ராய்டு ஓ... என்னென்ன ஆச்சர்யங்கள் தரவிருக்கிறார் சுந்தர்பிச்சை? #GoogleIO

வ்வொரு வருடமும் I/O டெவலப்பர் மாநாட்டினை நடத்தி புதுப்புது அறிவிப்புகளை வெளியிடுவது கூகுளின் வழக்கம். எப்படி கட்சியின் திருப்புமுனை மாநாடுகள் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதுபோலவே டெக் உலகில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் ஒன்று இந்த கூகுள் டெவலப்பர்கள் மாநாடு. கடந்த வருடம் மே மாதம் நடந்த டெவலப்பர்கள் மாநாட்டில்தான் கூகுள் டூயோ, அலோ ஆப், கூகுள் அசிஸ்டன்ட் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது கூகுள். அதேபோல இந்த வருடமும் ஆண்ட்ராய்டு ஓ, ஆண்ட்ராய்டு வியர்கள் என ஆச்சர்ய அறிவிப்புகளை கூகுளின் சி.இ.ஓ சுந்தர்பிச்சை வெளியிடுவார் எனக் காத்திருக்கின்றனர் டெக்கீஸ். இந்த ஆண்டிற்கான கூகுள் I/O டெவலப்பர் நிகழ்ச்சி இன்று இரவு 10.30 மணி முதல் தொடங்குகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்த டெவலப்பர் மாநாட்டிற்கு முன்பு எக்கச்சக்க எதிர்பார்ப்புகளும், யூகங்களும் கிளம்பும்.  அப்படி இந்த முறை அதிகம் எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் இவைதாம்!

சுந்தர்பிச்சை

ஆண்ட்ராய்டு ஓ:

நௌகட்டிற்கு அடுத்து, ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷன்தான் இந்த ஆண்ட்ராய்டு ஓ. சில நாட்களுக்கு முன்னர்தான் இதன் டெவலப்பர் ப்ரிவ்யூவை வெளியிட்டது கூகுள். மேற்படி எந்த விவரங்களும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த நிகழ்வில் இதுகுறித்த கூடுதல் தகவல்களை கூகுள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த பேட்டரி பயன்பாடு, நோட்டிஃபிகேஷன் சானல்கள், ஆட்டோஃபில் API போன்றவை இதன் குறிப்பிடத்தகுந்த அம்சங்கள். 

ஆண்ட்ராய்டு ஆட்டோ : அடுத்து என்ன?

ஆண்ட்ராய்டு ஆட்டோ

ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டம் மொபைலைப் பொறுத்தவரை ராஜாதான். ஆனால் மொபைல், டேப்லட் போன்றவற்றோடு மட்டும் ஆண்ட்ராய்டின் சாம்ராஜ்யத்தை நிறுத்தாமல் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல நினைக்கிறது கூகுள். இதன் முதல்கட்டமாக ஆடி மற்றும் வால்வோ கார்களின் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்க்ரீன்களில் ஆண்ட்ராய்டு இடம் பெறவிருக்கிறது. இதன்மூலம் காரின் இன்ஃபோடெயின்மென்ட் திரையிலேயே ஆண்ட்ராய்டு  மற்றும் கூகுளின் வாய்ஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட சேவைகளைப் பெறலாம். இதற்கான அறிவிப்பு சமீபத்தில்தான் வந்தது. எனவே இதுகுறித்த கூடுதல் தகவல்கள் இந்த நிகழ்வில் இடம் பெறலாம்.

கூகுள் அசிஸ்டன்ட்:

கடந்த வருட டெவலப்பர் நிகழ்வில்தான் கூகுளின் AI அசிஸ்டன்ட் என்ட்ரி கொடுத்தது. இந்த ஆண்டும் அதிகம் கவனிக்கப்படும் அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது கூகுள் அசிஸ்டன்ட். கூகுளின் வாய்ஸ் அசிஸ்டன்ட்டாக மட்டும் இல்லாமல், வேறு பிளாட்பார்ம்களில் ஆண்ட்ராய்டு, ஹோம் அப்ளிகேஷன்களில் ஆண்ட்ராய்டு போன்றவை கூகுளின் அடுத்த மூவ் ஆக இருக்கலாம். இதன்மூலம் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட்களின் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும் என்பதால், இதுகுறித்த விவரங்களும் டாக் ஆப் தி ஈவன்ட் ஆக இருக்கும்.

கூகுள் டெவலப்பர்கள் மாநாடு Google IO 2017

ஆண்ட்ராய்டு வியர்:

அதிகம் சென்றடையாத கூகுளின் புராஜெக்ட்களில் ஒன்றாக இருக்கிறது ஆண்ட்ராய்டு வியர். எனவே இதுகுறித்த மேம்பாடுகள் தொடர்பான தகவல்கள் இன்றைய நிகழ்வில் இடம்பெறலாம்.

புதிய மாற்றங்கள்:

மேலே பார்த்த விஷயங்கள் அனைத்தும் ஏற்கெனவே வெளியான தகவல்கள்தான். ஆனால் இவற்றைத் தவிர்த்து இன்னும் புதிய விஷயங்களை கூகுள் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மெண்டட் ரியாலிட்டி, கூகுளின் புதிய ஓ.ஸ். ஆன பியூசியா போன்றவை குறித்த புதிய அப்டேட்ஸ் வெளிவரலாம். இந்த நிகழ்வு இன்று இரவு 10.30 மணிக்கு துவங்குகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்