Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்ஸ்டாகிராமின் புதிய எமோஜி ஐகான் என்ன செய்யும் தெரியுமா?

எமோஜி

இன்ஸ்டாகிராம் புகைப்படங்களைப் பகிரும் ஒரு சமூக வலைதளம். அதில் இன்று புதுமையான அப்டேட்டை வெளியிட்டுள்ளது ஃபேஸ்புக். 700 மில்லியன் வாடிக்கையாளர்களைச் சமீபத்தில் தாண்டிய இன்ஸ்டாகிராம் எப்போதும் புதிய அப்டேட்டுகள் மூலம் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும். அப்படி புதிய எமொஜி ஐகான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். ஆன் செய்தவுடன் ஒரு எமோஜி ஐகான் தோன்றுகிறது. அதன் வசதிகள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விதமாக உள்ளது.

இந்த எமோஜி ஐகான் மூலம் கேமராக்களில் வினோதமான முகங்களை வைக்க முடியும். உதாரணமாக வாயைத் திறந்தால் முயல் காதுகள் மற்றும் நாக்குகள் போன்ற முகம், கண்ணாடி அணிந்த முகம் போன்ற பலவிதமான மாஸ்க்குகளை வழங்குகிறது. இதனை ஸ்டோரியாகவும், நேரடி போஸ்டாகவும், மற்ற சமூக வலைதளங்களிலும் ஷேர் செய்யும் வசதியுடன் வழங்கியுள்ளது.

இதற்கு முன் பல புகைப்படங்களை ஸ்டோரியாக பதிவிடும் வசதியை அறிமுகம் செய்து, ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கில் ஸ்டோரிக்கள் பகிரப்படுவதாக அறிவித்திருந்தது இன்ஸ்டா. மேலும் இன்ஸ்டாகிராமின் தனித்தனி சேவைகளான பூமராங், லே-அவுட் போன்றவைகளை இன்ஸ்டாகிராம் ஆப்க்குள்ளாகவே ஒருங்கிணைக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. 

எமோஜி

ஃபேஸ்புக், ட்விட்டர் போல இன்ஸ்டா லைவ் ஆப்ஷனும் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இந்த புதிய எமோஜி அப்டேட் இன்ஸ்டா ரசிகர்களுக்குப் புதுமையான அனுபவத்தைத் தருவதாக பகிர்ந்து வருகின்றனர் பயனாளிகள். ஃபேஸ்புக் சி.இ.ஓ மார்க் சக்கர்பெர்க் இன்று தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், "இன்று முதல் இந்த எமோஜி சேவை கேமராவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதுதான் என் ஃபேவரைட்" என்று கண்ணாடி அணிந்திருப்பது போன்ற படத்தை வெளியிட்டு இந்தச் சேவையை அறிமுகம் செய்து வைத்தார். 

 

 

இந்தச் சேவை ஸ்னாப் சாட்டிலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அது மட்டுமில்லாமல் மார்க் ஒரு சேவையைச் தனது ஒரு சேவையில் அறிமுகம் செய்தால் அதனை வேறு வேறு வடிவில் எல்லா சேவைகளிலும் அறிமுகம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். மெசன்ஜெரில் ''மை டே'', வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ், இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸ் என பெயர் மாறி இருந்தாலும் சேவை என்னவோ ஒன்று தான் என்கின்றனர் பயனாளர்கள்.

அதேபோல் இந்த கேமரா புதுமையை, ஏற்கெனவே ஃபேஸ்புக் கேமராவில் சோதித்தது நினைவிருக்கலாம். இப்படி ஒரே தயாரிப்பை பல இடங்களில் அறிமுகம் செய்வது சிறந்த உத்தியாக இருந்தாலும் தொழில்நுட்பத்தில் அது கொஞ்சம் பழைய விஷயமாகி விடுகிறது என்பதை மறுக்க முடியாது. இது நாள் வரை இன்ஸ்டாகிராமில் பூமராங் வீடியோ விட்டவர்கள் இனி கேமரா வீடியோ பகிர்வார்கள். 

இந்த சேவையை பயன்படுத்த உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கில் கேமராவை ஆன் செய்து எமோஜி ஐகானை க்ளிக் செய்தால், கீழே பல விதமான முகபாவனைகள் தோன்றும். அதனைத் தேர்ந்தெடுத்து உங்கள் பதிவை பதிவிட முடியும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close