ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 790 கோடி ரூபாய் அபராதம்... ஐரோப்பிய யூனியன் அதிரடி! | European Union fines Facebook over 7.9 billion

வெளியிடப்பட்ட நேரம்: 21:37 (18/05/2017)

கடைசி தொடர்பு:07:11 (19/05/2017)

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 790 கோடி ரூபாய் அபராதம்... ஐரோப்பிய யூனியன் அதிரடி!

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு. 790 கோடி ரூபாய்  அபராதம் விதித்துள்ளது ஐரோப்பிய யூனியன்.

fb

உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமாக திகழ்ந்து வருகிறது ஃபேஸ்புக். இது மட்டுமின்றி இன்ஸ்டாகிராம், மெஸ்ஸெஞ்சர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் ஃபேஸ்புக் நிர்வகித்து வருகிறது. இதனிடையே 2014-ல் வாட்ஸ்அப்பை வாங்கியபோது, தவறான தகவலை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இது குறித்த விசாரணையை ஐரோப்பிய யூனியன் மேற்கொண்டு வந்தது. இதையடுத்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 110 மில்லியன் யூரோக்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு 790 கோடி ரூபாயாகும். இது குறித்து ஃபேஸ்புக் தரப்பில் '2014-ல் பதிவு செய்யப்பட்ட தகவல்களில் தெரியாமல் சில தவறுகள் நிகழ்ந்துவிட்டதாக' கூறப்பட்டுள்ளது.