வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (20/05/2017)

கடைசி தொடர்பு:16:12 (20/05/2017)

இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் கவனத்துக்கு..!

'இன்ஸ்டாகிராம் பயனாளர்கள், மனதளவில் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்' என்று சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. 

 


சமூக வலைதளங்கள்குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம், சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 14 முதல் 24 வயதுக்கு உட்பட்ட 1,500 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில், 'தொடர்ச்சியாக சமூக வலைதளங்கள் பயன்படுத்துபவர்கள், ஒருவித மன உளைச்சல், கவலை, தனிமை உள்ளிட்ட மனநோய் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்' என்று  தெரியவந்துள்ளது. இளைஞர்கள், புகையிலை, மது அருந்துதலைவிட சமூக வலைதளங்களில் எளிமையாக அடிமையாகின்றனர் என்றும் ஆய்வு கூறுகிறது.  

ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், ஸ்நேப்சாட், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள்குறித்த ஆய்வில், 'எதிர்மறை எண்ணங்களை உருவாக்குவதில், 'இன்ஸ்டாகிராம்' முதலிடத்தில் உள்ளது. அதிகமான அளவில் 'இன்ஸ்டாகிராம்' பயன்படுத்துபவர்கள், அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்' என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அடுத்த இடத்தில், 'ஸ்நாப்சேட்' உள்ளது. 'யூடியூப்' தளம் மட்டும் நேர்மறையான எண்ணங்களையும் மகிழ்ச்சியையும் உருவாக்குகிறது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.