வெளியிடப்பட்ட நேரம்: 11:31 (23/05/2017)

கடைசி தொடர்பு:13:28 (25/05/2017)

ஒருவர் இறந்தபின் அவர் ஜிமெயில் அக்கவுண்ட் என்ன ஆகும்? #Gmail

ஜிமெயில்

எண்ணற்ற வலைதளங்கள் இன்று இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நாம் கணக்குகளை (account) வைத்துள்ளோம். அவை மூலம் நன்மைகளையும் சந்திக்கின்றோம். தீமைகளையும் எதிர்கொள்கின்றோம். இளம் வயதில் நாம் தொடங்குகின்ற இந்தக் கணக்குகள் நம்மைப் பல்வேறு நிலைகளுக்குக் கொண்டு செல்கின்றன. இந்த ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற வலைதளங்கள் உலகம் முழுவதையும் நம் முன்னே கொண்டு வருகின்றன. இவையெல்லாம் நமக்கு அனுப்புகின்ற அறிவிப்புகள் (notification) நம்முடைய ஜிமெயிலுக்கு தான் வந்து சேரும். நம் ஜிமெயில் உள்ளே இருக்கிற ரகசியங்கள் பற்றி யோசித்துப் பாருங்கள்! இந்த ஜி-மெயில் கணக்கு நமக்குப் பிறகு என்ன ஆகும் என்ற பயம் நம் அனைவருக்கும் இருக்கிறது தானே.

ஒவ்வொரு வலைதளங்களிலும் நாம் கணக்குப் பெறும்பொழுது அதற்கான data ownership என்கிற உரிமையையும் நமக்கு கூகுள் வழங்கும். அதே மாதிரி தான் ஜி-மெயில். அந்த ஜி-மெயில் கணக்கு நம்முடைய கட்டுக்குள் இருக்கும் வரையில் நமக்கு எந்த பிரச்னையும் நேராது. எதிர்பாராத விதமாக நீங்கள் இறந்து விட்டால் உங்களது ஜி-மெயில் கணக்கு என்ன ஆகும்?

உங்களது மனைவி/கணவர் அதைப் பெற்றுக் கொள்ள முடியுமா?

இதை ஒரு அகாடமிக் பயிற்சி என்று சொல்லலாம். அதாவது உங்களுக்கு இருக்கின்ற அனைத்து வலைதளங்களின் அறிவிப்புகளும் உங்களது ஜி-மெயில் கணக்கிற்கு தான் வந்து சேரும் . ஆகையால் உங்களது ஜி-மெயிலுக்குள் நுழையாமல் மற்ற கணக்குகளை நெருங்க முடியாது. எனவே உங்களது அறிமுகக் கடிதங்கள் நீங்கள் இறந்த பின்னர் உங்களது மனைவிக்குத் தெரியும்படியாக வைத்திருக்க வேண்டும். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் ஜிமெயில் பயனாளரை ஆள்மாறட்டம் (impersonate) செய்வது விதமீறலுக்கு உட்பட்டதாகிவிடும். கூகுள் இதனை விரும்பாது; இதை ஆதரிக்கவும் செய்யாது. வேண்டுமென்றால் உங்களது மனைவி தான் உங்களது இறப்பிற்குப் பின்னர் உங்கள் கணக்கை உபயோகிக்கின்றார் என்பதை அறிந்து கொள்ள வாய்ப்புண்டு. அதன் பின்னர் அவர்களது கவனத்திற்குட்படுத்தி கூகுள் உங்களது கணக்கை ஒட்டுமொத்தமாக அழித்துவிடம். இதனல் உங்களது மனைவி உங்களது ஜி-மெயில் கணக்கிற்குள் நுழைவது புறக்கணிக்கப்படும்.

ஜி-மெயில் என்பது ஓர் இணைய சேவைதானே தவிர விற்பனைப் பொருள் அல்ல. உங்களது பயன்பாடு என்பது ஒருபோதும் பரிமாற்றம் செய்யப்படாது.

ஒருவேளை உங்களது ஜி-மெயில் கடவுச் சொல்லை உங்கள் மனைவியிடம் தெரியப்படுத்துவதற்கு முன்னரே நீங்கள் இறந்து விட்டால் உங்களது கணக்கு நீங்கள் கடைசியாகப் பயன்படுத்திய நாளிலிருந்து 9-வது மாதம் தானாகவே அழிந்துவிடும். ஒருவேளை உங்கள் மனைவி உங்களது ஜி-மெயில் கடவுச் சொல்லை அறிந்திருந்தால் அவர்கள் அதன் உள்ளே நுழையும் பொருட்டு ரிஸ்க்-ஐ நோக்கி நகர வேண்டியிருக்கும். அதாவது உங்கள் மூலமாக உங்களது மனைவி ஆள்மாறாட்டமாக கணக்கினுள் நுழைகிறார் என்பதை கூகுளிடம் தெரியப்படுத்த வேண்டியிருக்கும். இதற்குத் தான் கூகுள் நிறைய பிரைவசி பாலிசிகளை வழங்கியுள்ளது.

உங்களுடைய ஜி-மெயிலை உங்களது மனைவிக்கு/கணவருக்கு உடைமையாக்க வழி உள்ளதா?

  • ஆம்.உங்களது மனைவி/கணவர் உங்கள் இறப்பிற்குப் பின்னர் உங்கள் கணக்கினுள் நுழைய மனு அனுப்பலாம். ஆனால் சட்டத்தின் தடைகளைத் தாண்டி அதீத முயற்சிகளைக் கையில் எடுக்க வேண்டி வரும்.
  • முன்னமே உங்களது ஜி-மெயில் கணக்கின் அறிவிப்புகளைப் பெற்றிருக்க வேண்டும்
  • உங்களது இறப்புச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும்
  • கோர்ட்டு உங்களது ஜி-மெயில் கணக்கிற்கு உங்கள் மனைவி தான் entitled என்று கூறியிருக்க வேண்டும்.
  • இதையெல்லாம் கொண்டிருந்தால் கூகுள் உங்களது மனைவிக்கு உதவி செய்யும்.
  • அடுத்து, உங்களது மனைவி /கணவர் உங்களது கணக்கின் உள்ளடக்கம் (content) அனைத்தையும் பெற்றால்கூட அவரால் முழுமையாக கணக்கை இயக்க முடியாது.அதாவது தகவல்களை அனுப்பவோ பெறவோ முடியாது. உங்களது தானியங்கி பணப் பரிவர்த்தனை உங்களது மனைவியின்/ கணவரின் கணக்கிற்கு டிரான்ஸஃபர் செய்யப்பட வேண்டும். இதுவும் கூகுளின் செயல்!
  • ஒரு வேளை உங்களது மனைவி /கணவர் உங்கள் ஜி-மெயில் கணக்கைக் குறித்து கவலைப்படவில்லையெனில் உங்களின் கணக்கு தானாகவே அழிந்துவிடும்.

உங்களுடைய கணக்கினுள் நுழையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் உங்களது கடவுச்சொல்லை உங்கள் மனைவியின்/கணவரின் உடைமையாக்கவில்லை என்றாலும் உங்களது சட்டப் பயனாளி (legal beneficiary) ஆக உங்களது உள்ளடக்கங்களை வைத்து இணக்கம் தெரிவுக்க முடியும். ஆகையால் நீங்கள் எதுவெல்லாம் உங்களது மனைவி/கணவர் தெரிந்து கொள்ளக் கூடாது என நினைத்தீர்களோ அதுவெல்லாம் 9 மாதம் முன்னரே உங்களது மனைவியால் தெரிந்து கொள்ளப்படும்.

எனவே உண்மையற்ற ஒன்றை உண்மையான ஒன்றாக உருவகிக்க வேண்டும். உங்களது data-க்களை நீங்களே சொந்தமாக்கி வைத்திருக்க வேண்டும். உங்களது கார், புத்தகம் , வீடு எல்லாம் உங்களுக்கே உரிமையுடையது என்பதற்கான அத்தாட்சி வைத்திருப்பீர்கள் அல்லவா அதுபோலத் தான். உங்களது ஆன்லைன் சேவைகள் இதற்கான வசதிகளையும் கொள்கைகளையும் கொண்டிருக்கின்றன. அதை வைத்து நீங்கள் ஆவணங்களைப் பெறலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்