வெளியிடப்பட்ட நேரம்: 10:43 (27/05/2017)

கடைசி தொடர்பு:10:42 (27/05/2017)

மொபைல் சார்ஜிங் தவறால் 33,000 புகைப்படங்களை இழந்த பெண்! #MobileCharging

மொபைல்

ஸ்மார்ட்போன்.. பேருக்கேற்றது போல ஸ்மார்ட்டாகத்தான் வேலை செய்யும். நாமும் அதைப்போல ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும் என்பதுதான் தம்ப் ரூல். அப்படியில்லாத ஒருவர், தனது 33000 மொபைல் புகைப்படங்களைத் தவறவிட்டிருக்கிறார்.

சிலருக்கு மொபைலை சார்ஜ் செய்யக் கூட நேரம் இருப்பதில்லை. அதனால், முழு சார்ஜும் தீரும்வரை கூட மொபைலை நோண்டிக் கொண்டிருப்பார்கள். அதில் ஒருவர்தான் ஆர்ப்ஸ்(Arps). சில மாதங்களுக்கு முன் அப்படித்தான் வேலை செய்துகொண்டிருந்தார். புகைப்படங்கள் எடுப்பது ஆர்ப்ஸுக்கு பிடித்த வேலை.  படங்கள் எடுத்துக்கொண்டிருந்தபோது மொபைலின் சார்ஜ் 5%, 4% எனக் குறைந்துக் கொண்டே வந்தது. அதை அலட்சியம் செய்துவிட்டு படங்கள் எடுத்துக் கொண்டேயிருந்தார். மொபைல் ஆஃப் ஆகிவிட்டது. 
“அதனால் என்ன? சார்ஜ் போட்டுக்கலாம்” என நம்மைப்போலதான் அவரும் நினைத்தார். 

சார்ஜ் போட்டு 5% சார்ஜ் ஆனதும் மீண்டும் படங்கள் எடுப்பார். மீண்டும் மொபைல் ஆஃப். மீண்டும் சார்ஜ். மீண்டும் ஆஃப். சார்ஜ்...ஆஃப்...சார்ஜ்...ஆஃப். ஒரு கட்டத்தில் மொபைல் சார்ஜ் ஆகவே இல்லை. சார்ஜ் போட்டதும் மொபைல் recovery modeக்கு போய்விட்டது. ரெகவர் செய்த பின்பு பார்த்தால், மொபைலில் இருந்த 33000 புகைப்படங்களும்...ஸ்வாஹா!

அதன் பின் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்றும் டேட்டாவை எடுக்க முடியவில்லை. புகைப்படங்கள் எடுப்பதே வேலை என இருந்தவருக்கு, 33000 படங்கள் போனதும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்தச் செய்தியில் ஆர்ப்ஸ் செய்த தவறுகள் என்ன என்ன?

மொபைல்

1) சார்ஜ் போடும் முறை:
 மொபைல் போனை 100% சார்ஜ் செய்துகொண்டேயிருப்பது தவறு. 0% தீரும் வரை காத்திருப்பதும் தவறு. 100% சார்ஜ் ஆனதும் மொபைல் தானாக சார்ஜிங்கை நிறுத்தும். ஆனால், 100% இலக்கைத் தொட்டதும் பேட்டரிக்கு ஒரு ஸ்ட்ரெஸ் வரும் என்கிறார்கள். அது பேட்டரியின் ஆயுளை குறைக்கும். எனவே, 10% சார்ஜ் இருக்கும்போதே சார்ஜிங்கில் போடுங்கள். 90-95% சார்ஜ் ஆனதும் எடுத்து விடுங்கள். 

2) சார்ஜ் ஏறும்வரை பொறுமையாக இல்லாதது:
தூக்கத்தில் எழுப்பினால் நாம் என்ன செய்வோம்? கிட்டத்தட்ட அது போலதான் பேட்டரியும். வெறும் 2% சார்ஜ் இருக்கும் பேட்டரியின் சக்தி குறைவு. அதை வைத்து மீண்டும் மொபைலை இயக்குவது ரிஸ்க். எந்த மின்னணு சாதனம் என்றாலும், அதை முறையாக அணைப்பது முக்கியம். அப்படி நடக்கவில்லையென்றால் எதிர்பாராத பிரச்னைகளை அது உருவாக்கும். அப்படியொரு பிரச்னைதான் ஆர்ப்ஸ் சந்தித்தது.

3) பேக்கப் எடுத்து வையுங்கள்:
33000 படங்கள் எடுக்க முடிந்தவரால், அதை பேக்கப் எடுத்து வைக்க முடியவில்லை. மொபைல் ரிப்பேர் ஆனது ஒரு பக்கம். ஒருவேலை தொலைந்து போயிருந்தால்? டிஜிட்டல் உலகில் டேட்டாதான் எல்லாம். அதனால், அதைத் திருட, அழிக்க பல வழிகளில் பிரச்னைகள் வரும். அதனால் எந்த டேட்டா என்றாலும் அதைப் பாதுகாப்பாக பேக்கப் எடுத்து வைக்க வேண்டும். அது பென் டிரைவோ, ஹார்டு டிஸ்க்கோ, கணினியோ, அல்லது கிளவுட் சேவைகளோ... ஆனால், பேக்கப் எடுத்து வைக்க வேண்டும். ஆர்ப்ஸ் அதைச் செய்யவில்லை.

ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்டாக இருப்பதும் இல்லாமல் போவதும் நமது ஸ்மார்ட்னெஸ் உடன் தொடர்புடைய விஷயம். ஸ்மார்ட்டா இருங்க!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்