வெளியிடப்பட்ட நேரம்: 10:22 (29/05/2017)

கடைசி தொடர்பு:09:28 (30/05/2017)

பட்ஜெட் ஆண்ட்ராய்டு மொபைல்களில் மிஸ்டர். பெர்ஃபெக்ட் எது? #AwesomeAndroid

ஸ்மார்ட்போன் வாங்குறதுக்கு ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் தரும் ஆஃபர்  முக்கியமில்லை. நமக்குத் தேவையான வசதிகள் அந்த மொபைலில் இருக்கிறதா என்பதே விஷயம். 5 நிமிஷத்துல முடியுற சேல் விட, நிண்ணு நிதானமா வாங்குற ஷாப்பிங்கே பெஸ்ட். 12000-20000 விலையில் கிடைக்கும் மிட் ரேஞ்ச் (Mid range) மொபைல்களின் எவை பெஸ்ட்? உங்கள் தேவைகளை எந்த மாடல் பூர்த்தி செய்யும்?

1) ASUS ZenFone 3 Zoom

மொபைல்


கேமரா தவிர மற்ற அனைத்திலும் அஸுஸ் எப்பவும் கில்லிதான். குறிப்பாக செல்ஃபிக்கள் அஸுஸில் சுமாராகத்தான் இருக்கும். ஆனால், இந்த மாடலில் ஜூம் செய்து எடுக்கப்படும் புகைப்படங்கள் கூட குவாலிட்டி குறையாமல் இருப்பது ஸ்பெஷல்.12x zoom வசதியில் எடுக்கப்படும் படங்கள் தரத்தில் மின்னுகின்றன. கொரில்லா கிளாஸூம், மின்னல் வேக பிராஸசரும், பக்கா பவர்ஃபுல் பேட்டரியும் கூடுதல் ஸ்பெஷல். கேமராதான் உங்கள் முக்கியமான தேர்வு என்றால் இதற்கு டிக் அடிக்கலாம்.

விலை: 16500


2)  Lenovo Z2 Plus

lenova மொபைல்


பட்ஜெட் மொபைலில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறது லெனோவோ. ஹேங் ஆகும், கொஞ்சமா சூடாகும் என ஆண்ட்ராய்டுக்கே உரிய சிக்கல்கள் இருந்தாலும், விலையும் அதற்கு தரும் வசதிகளும் லெனோவோ பக்கம் வாடிக்கையாளரை திருப்புகிறது. ”திரும்பிய இடமெல்லாம் விளம்பரங்கள் இல்லை என்பதே லெனோவோவை பிடிக்க போதும்” என்கிறார் ஒரு குறும்புக்கார ட்விட்டர். 4ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, சக்தி வாய்ந்த குவால்கோம் பிராசஸர் என வசதிகளை கேட்கும்போது ஈர்க்கத்தான் செய்கிறது இந்த மாடல். 3500mAh பேட்டரியும், 13 மெகா பிக்ஸல் கேமராவும் கூடுதல் அட்ராக்‌ஷன். 

விலை: 15800 -16000

3) ரெட்மீ நோட் 4:

மொபைல்

பட்ஜெட் மொபைல் என்றவுடன் ரெட்மீக்கு அங்கே இடம் கொடுக்க வேண்டும். இல்லையேல் பொங்கிவிடுவார்கள் மொபைல் காதலர்கள். “அது அயர்ன் பாக்ஸுப்பா” என மீம்ஸ் போடும் அதே ஆட்கள் தான் காத்திருந்து ஆன்லைனில் ஆர்டர் போடுவதும். இந்த விளையாட்டை எல்லாம் மீறி, மொபைல் எப்படி? இந்த ரேஞ்ச் மொபைலில் இருக்கும் 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி, 5.5 இன்ச் ஸ்க்ரீன், 20 மெகாபிக்ஸல் எல்லாமே இதிலும் உண்டு. ஆனால் விலை? 12,999 தான். அங்கு ஸ்கோர் செய்கிறது ரெட்மீ. பேட்டரியும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா 4100 mAh. பார்க்கவும் பந்தாவான மொபைல் தான்.

விலை: 12,999

4) மோட்டோ G4 Plus. :

மொபைல்

10000 ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ஃபோன்

“மற்ற நிறுவனங்கள் எல்லாம் கொஞ்சம் புதுசுதான். நாங்க பழசு. ஆனா, பெருசு” - இது மோட்டோரோலா பன்ச். வலிமையான பில்ட் குவாலிட்டி, குறைவில்லாத பெர்ஃபார்மென்ஸ் என எப்போதும் மோட்டோ கலக்கல் தான். மிட் ரேஞ்சில் இவர்களின் வேட்பாளர் G4 Plus. 3ஜிபி ரேம், 32 அல்லது 64 ஜிபி மெமரி, 3000mAh பேட்டரி என ஒப்பீட்டளவில் இவர்களின் வசதிகள் சற்று குறைவுதான். ஆனால், மோட்டோவின் நம்பகத்தன்மை அதிகம். 3 ஜிபி ரேம் என்றால், அது மற்ற சைனா மொபைல்களில் 4ஜிபி ரேம் போல என்கிறார்கள் மோட்டோ ரசிகர்கள். பேட்டரியும் சுமார்தான். ஆனால், நம்பிக்கையான மாடல் சொல்லுங்கப்பா என்பவர்கள் மோட்டோக்கு ஜே போடலாம்.

விலை: 12500

நீங்க எப்படி பீல் பண்றீங்க