வருகிறது 'கேலக்ஸி S8+'... பழைய மாஸை திரும்பப் பெறுமா சாம்சங்!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8+ ஸ்மார்ட் போனின் புதிய வேரியன்ட் இந்தியாவில் வரும் ஜூன் 9-ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய வேரியன்டில், 64 ஜி.பி ரேமும், 128 ஜி.பி சேமிப்பு வசதியும் இருக்கும். இதன் விலை, 74,990 ரூபாய் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. 

இந்த கேலக்ஸி S8+, சாம்சங் ஷாப் மற்றும் ஃபிளிப்கார்ட் இணையதளங்களில் வரும் ஜூன் 2-ஆம் தேதியிலிருந்தே கிடைக்கும் எனக் கூடுதல் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப ஆஃபராக சாம்சங், முதலில் ஸ்மார்ட் போன்களை வாங்குவோருக்கு 4,499 ரூபாய் மதிப்புள்ள 'ஒயர்லெஸ் சார்ஜரை' இலவசமாக வழங்கவுள்ளது. இந்தப் புதிய S8+, கறுப்பு நிறத்தில் மட்டுமே சந்தைகளில் கிடைக்கும். 

சாம்சங் நிறுவனம், தனது 'நோட் 7' போன்கள், பயன்படுத்திக் கொண்டிருக்கும்போதே வெடித்தது என்ற காரணத்தால் ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கிருந்த இடத்தை மற்ற நிறுவனங்களிடம் இழந்தது. இந்நிலையில், தான் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பதற்கு தொடர்ச்சியாக 'கேலக்ஸி S8' வகை போன்களை வெளியிட்டு வருகின்றது சாம்சங். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!