ஸ்மார்ட் போன் தயாரிப்பை இரட்டிப்பாக்கும் சாம்சங்..!

ஸ்மார்ட் போன் விற்பனையில் இந்தியச் சந்தையில் முக்கிய இடத்திலிருப்பது, சாம்சங் நிறுவனம். கடந்த ஆண்டு கிளம்பிய நோட் 7 வெடிப்பு பிரச்னை, புதிது புதிதாக பல்வேறு நிறுவனங்களின் என்ட்ரி, இவை எதுவுமே சாம்சங் நிறுவனத்தின் விற்பனையைப் பாதிக்கவில்லை. இதனால் சாம்சங் நிறுவனம், இந்தியாவில் தனது ஸ்மார்ட் போன் தயாரிப்பை இரட்டிப்பாக்க முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Samsung


அதன்படி, நொய்டாவில் உள்ள அதன் ஃபேக்டரியைப் பெரிதாக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக, 40 பில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதாகக்  கூறப்படுகிறது. இதற்கான தொடக்கப் பணிகள் நாளை தொடங்க உள்ளன. இதன்மூலம் மாதத்துக்கு 10 மில்லியன் ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்க உள்ளது சாம்சங். இதற்காக, உத்தரப்பிரதேச அரசுடன் கடந்த ஆண்டே ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது முதலீட்டை இரட்டிப்பாக்கியுள்ளது, சாம்சங் நிறுவனம். 


2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவில், இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் விற்பனை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!