Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”சுத்தமா பிரஷ் பண்ணா சத்தம் வரும்... இல்லைன்னா வராது!” - மருத்துவரின் கேட்ஜெட் பிரஷ்

பல் பிரஷ்

நீங்கள் பல் தேய்க்கும் முறை சரியானதா? எப்போதாவது, எப்படி பல் துலக்க வேண்டும் என நீங்கள் கூகுள் செய்து பார்த்திருக்கிறீர்களா?


ஏனோ தானோ என இரண்டு நிமிடங்கள் கடமைக்கு பல் துலக்குபவர்கள் தான் நம்மில் ஏராளம். ஆனால்  பல் துலக்குவது ஒரு கலை என்கிறார்கள்  மருத்துவர்கள். எப்படி வேண்டுமானாலும் பல்  துலக்கலாம் என்பதல்ல, இப்படித்தான் துலக்க வேண்டும் என்கிறது மருத்துவ உலகம். அவசர கதியில் முறையாக பிரஷ் செய்யப்படாத பற்களுக்கு பிற்காலத்தில் மிகப் பெரிய விலை கொடுத்தாக வேண்டும். பல் துலக்குவது சிறிய விஷயம் தான், ஆனால் பல் சிறிய விஷயம் இல்லையே?

தொட்டத்தற்கெல்லாம் கேட்ஜெட் வந்துவிட்டது. துலக்குவதற்கு ஒன்று இல்லையா என நினைத்து தேடியபோது நமக்கு கிடைத்தது தான் "வீ பீட் (V beat)" ப்ரெஷ்.   

"வீ பீட்" முழுக்க நமது சென்னைத் தயாரிப்பு என்பது கூடுதல் செய்தி. அப்படி என்ன இருக்கிறது இந்த பிரெஷ்ஷில் என்கிறீர்களா? இருக்கிறது. நீங்கள் பல் துலக்கும் முறையை சரியாக பின்பற்றுகிறீர்கள் என்றால் பிரெஷ்ஷில் இருக்கிற சின்னச் சின்ன உருண்டைகளில்(Balls) இருந்து ஒரு சத்தம் வந்து கொண்டே இருக்கும். தவறாக துலக்குகிறீர்கள் என்றால் சத்தம் நின்று விடும். நீங்கள் சரியான முறையில் பல் துலக்குகிறீர்கள் என்பதை ஒரு சத்தத்தை வைத்து கண்டறியலாம்.  

ஆனந்த்

இந்த பிரஷ்ஷை வடிவமைத்திருக்கும் விஜய் ஆனந்தை சந்தித்துப் பேசினோம். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரிகிறார். 

"மருத்துவத் துறையில் இருப்பதால் மருத்துவம் சார்ந்து எதாவது கண்டுபிடிக்கணும்னு ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருந்தேன். ஒரு நாள் கண்ணு தெரியாத ஒருத்தர் என்னோட மருத்துவமனைக்கு பல் வலின்னு வந்திருந்தார். பல் வலி வருவதற்கான  முக்கியமான காரணமே முறையாக பல் துலக்காததுதான். அவங்களுக்கு எப்படி பல் துலக்கணும்னு உபயோகப்படுத்தும் முறையை சொல்லி கொடுத்தேன், ஆனாலும் அவங்களால சரியா புரிஞ்சிக்க முடியல. அப்போ தான் எனக்கு இந்த  ப்ரெஷ் ஐடியா தோணுச்சு. உடனே பல், டூத் பிரஷ் பற்றி தேடித் தேடி ஆராய ஆரம்பித்தேன். வீட்டுல இருக்க எல்லாரும் ரொம்ப சப்போர்ட் பண்ணுனாங்க. உண்மையா சொல்லனும்னா இந்த பிரஷ்ஷை  வீட்ல இருக்கவங்கள வச்சி தான் சோதனையே பண்ணுனேன். தப்பா இருந்தா உடனே சொல்லிடுவாங்க. திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிப்பேன். நெறய செலவாச்சு. ஆனாலும் அதையெல்லாம் பெருசா எடுத்துக்கல. இப்போ என்னைச் சார்ந்த நெறய பேர் இந்த ப்ரெஷ் தான் பயன்படுத்துறாங்க. இது வர யாரும் தப்பான ஃபீட்பேக் கொடுக்கல.  இன்னமும் இந்த ப்ரெஷ்ஷை சரியா கொண்டு போய் மக்கள்கிட்ட சேர்க்க முடியல ஆனா கொண்டு போய் சேர்த்து விடுவேன்” என நம்பிக்கையுடன் பேசுகிறார் விஜய் ஆனந்த். 

அவர் தந்த சாம்பிளைக் கொண்டு வந்து முயற்சி செய்து பார்த்தோம். நாம் எதிர்பார்த்த அளவுக்கு சத்தம் வரவில்லை. ஆனால், “இப்படித்தான் பல் தேய்க்க வேண்டும்” என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் முறையில் தேய்த்தால் சின்னதாக சத்தம் வருகிறது. தவறாக செய்தால், சத்தமே வரவில்லை. எந்தப் பெரிய இன்ஜினீயரிங் பிராசஸும் இல்லாமல், மின்சக்தியின் தேவையும் இல்லாமல் எளிமையாக இருப்பது பெரிய ஆச்சர்யம். பிற ப்ரெஷ்களுடன் ஒப்பிடும்போது  எளிதான பிரெஷ்ஷில்ஸ் தான் பயன்படுத்தப்படுகிறது. இதை முறையாக பேடன்ட் வாங்கி, சரியான புரோட்டோ டைப் செய்து வெளியிட்டால் நிச்சயம் கவனம் பெறும் என்பது மட்டும் உண்மை. அதைவிட, ஒரு சிக்கலான பிரச்னைக்கு இவ்வளவு எளிமையாக தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையைத் தந்ததற்காகவே V beatக்கு பெரிய ஓ போடலாம்.

வாழ்த்துகள் டாக்டர்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement