வெளியிடப்பட்ட நேரம்: 21:43 (07/06/2017)

கடைசி தொடர்பு:21:43 (07/06/2017)

அசரவைக்கும் ஒன் ப்ளஸ் 5... இந்தியாவில் எப்போது அறிமுகம்?

ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் அடுத்த மொபைலான 'ஒன் ப்ளஸ் 5' ஜூன் 22 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஒன்

ஐ-போன், சாம்சங் என முன்னணி நிறுவனங்கள் மொபைல் விற்பனையில் முந்திக் கொண்டாலும், பலருக்கு ஃபேவரைட் 'ஒன் ப்ளஸ்' மொபைல்கள். ஒன் ப்ளஸ் 1 என்ற மொபைல் மாடலுடன் தனது விற்பனையை தொடங்கியது இந்நிறுவனம். தொடர்ந்து வாடிக்கையாளர்களின் வரவேற்பு கிடைக்க, தற்போது 'ஒன் ப்ளஸ் 5' மொபலை அறிமுகப்படுத்துகிறது ஒன் ப்ளஸ் நிறுவனம்.

7.1 நௌகட் ஆண்ட்ராய்டு சாப்ட்வேரில் இயங்கும் இந்த மொபைலில், செல்ஃபி கேமரா 16 பிக்சலுடனும், பேக் கேமரா 23 பிக்சலுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 8 ஜி.பி ரேம், 4000mAh பேட்டரி, 5.5 இன்ச் டிஸ்ப்ளே உள்ளிட்ட வசதிகள் வாடிக்கையாளர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த வெளிச்சத்தில்கூட, துல்லியமாக புகைப்படங்களை இந்த மொபைலில் எடுக்கலாம் என்கிறார்கள் ஒன் ப்ளஸ் ஊழியர்கள்.