நிறைய வசதிகள்... குறைந்த விலை... ரெட்மியால் எப்படி சாத்தியம் ஆகிறது?

டச் ஸ்கீரின் மொபைல்கள் வெளியாக ஆரம்பித்த நாள்களிலிருந்தே அதன் விலை அதிகமாகத்தான் இருந்தது. ஆன்லைனில் மொபைல்கள் விற்க ஆரம்பித்ததும், அதன் விலை இறங்க ஆரம்பித்தது. அதுவும் மோட்டோரோலா, கூல்பேட் போன்ற பட்ஜெட் மொபைல்களின் வருகையால், மொபைல்களின் விலை, பல மடங்கு குறைந்தது. அதிலும் ஒருபடி மேலே போய் ரெட்மி போன்ற நிறுவனங்கள், ஃபிளாக்ஷிப் கில்லர் (Flagship Killer) என சொல்லப்படும் சிறப்பான ஸ்பெக்ஸ் இருக்கும் மொபைல்களைக் கூட 15000க்கும் குறைவாக ஆன்லைன் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. அவர்களுக்கு மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது எனக் கேட்டால், ”இதுதான் எங்கள் ஹிட்டிற்கான ரகசியம்” என்கிறார் ரெட்மி நிறுவனத்தின் இந்திய துணை தலைவர் மனுகுமார் ஜெய்ன். அவர் கூறும் முக்கியமான தொழில் நுணுக்கங்கள் இவைதாம்.

ரெட்மி

டிஸ்ட்ரிப்யூஷன் (Distribution)

பொதுவாக ஆஃப்லைனில் மொபைல் விற்கும் பல நிறுவனங்களின் டிஸ்ட்ரிப்யூஷன் ரேட் அதிகம். அது பல்வேறு நிலைகளைக் கடந்து வாடிக்கையாளர்களின் கைகளை வந்தடைகிறது. Brand --> National Distributor --> Regional Distributor --> Zonal Distributor --> Retailer --> Consumer. ஒரு மொபைலின் விலை அதிகமாவது இப்படித்தான். ரெட்மியைப் பொருத்தவரை, எங்கள் பிராண்டிலிருந்து நேரடியாக ஆன்லைனில் மட்டுமே விற்கப்படுகிறது. அதனால், எங்களால் இந்த மார்ஜினைக் குறைக்க முடிகிறது. 

இன்வென்ட்ரி கிடையாது

எங்களிடம் ஸ்டாக் (Inventory) என்ற விஷயமே கிடையாது. பெங்களூருவில் இருக்கும் தொழிற்சாலையில் ஒரு மொபைல் திங்களன்று தயாரிக்கப்படுகின்றது என்றால், அது வியாழன் அன்று வாடிக்கையாளருக்காக பேக் செய்யப்பட்டு விடுகிறது. ஒவ்வொரு வாரமும் இது நடக்கின்றது. திங்களன்று பொருள் தயாராகிறது. செவ்வாயன்று அது warehouseல் வைக்கபடுகிறது. புதன் அன்று எங்கள் பார்ட்னர்களிடம் (அமேசான், ஃப்ளிப்கார்ட் தளங்கள்) சேர்க்கப்படுகிறது. வியாழன் அன்று விற்கப்படுகிறது. எங்கள் ஸ்டாக் புக்கிலோ, அல்லது பார்ட்னர்களின் புக்கிலோ, மொபைல் இருப்பு இருந்ததே இல்லை. இதுநாள்வரையில், இது இந்தியாவின் எந்த நிறுவனத்திற்கும் சாத்தியமாகாத ஒன்று என நினைக்கிறேன். மற்ற மொபைல் நிறுவனங்களிடமும், அவர்கள் பார்டனர்களிடமும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கான ஸ்டாக் இருக்கும். அப்படியே எங்களுக்கு ஸ்டாக் இருந்தாலும், அது சில நாள்கள் தான். இதனால், எங்களது வொர்க்கிங் கேபிடல் மிக மிகக் குறைவு. 

மார்க்கெட்டிங்

எங்கள் பிராண்டிற்கு இருக்கும் மிகப்பெரிய வரமாக இதைக் கருதுகிறேன். ஆன்லைன்/ஆஃப்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் பல்வேறு மொபைல் நிறுவனங்கள் விளம்பரங்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்கின்றன. டிவி, செய்தித்தாள், ஹோர்டிங் என நாங்கள் எங்கும் விளம்பரம் செய்வதில்லை. விளம்பரத்திற்காக நாங்கள் செலவு செய்யும் தொகை மிக மிகக் குறைவு . இந்தப்பணம் அப்படியே விலையில் பிரதிபலிக்கிறது. ரெட்மி மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்கள் தான் எங்கள் பிராண்ட் அம்பாசிடர்.

சாஃப்ட்வேரிலும் லாபம் பார்க்கலாம்

இந்தியாவிலிருக்கும் பல்வேறு மொபைல் நிறுவனங்கள், மொபைலை விற்பதில் மட்டுமே லாபம் பார்க்கிறார்கள். அதாவது அவர்களின் லாபம் , ஹார்ட்வேரோடு நின்றுவிடுகிறது. எங்களுக்கு ஒரு மொபைல் விற்கும்போது கிடைக்கும் லாபம் மிகக்குறைவு, எங்களுக்கு அதிலிருக்கும் மென்பொருள் மூலம் அந்த மொபைலை வாடிக்கையாளர் எத்தனை ஆண்டுகள் பயன்படுத்துகிறாரோ, அத்தனை ஆண்டுகள் பணம் வருகிறது. ஃபேஸ்புக், கூகுள் எப்படி விளம்பரங்கள் மூலம் பணம் பார்க்கிறார்களோ, அதைப் போன்றதொரு நடைமுறைதான் இது. 

இன்னும் நிறைய வழிகள் இருக்கின்றன. ஆனால், இவை நான்குதான் எங்கள் நிறுவன மொபைல்களின் குறைவான விலைக்குக் காரணம் " என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!