Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

5000mAh பேட்டரியுடன் மோட்டோ E சீரிஸின் ரீ என்ட்ரி! #MotoE4

ட்ஜெட் போன்களுக்கு தற்போது பஞ்சமே இல்லை என்னும் அளவுக்கு பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வரிசையாக மொபைல்களை அறிமுகம் செய்து வருகின்றன. அவற்றில் ஒரு சில மட்டும்தான் அதிரடி ஹிட் அடிக்கின்றன. அப்படி சில வருடங்களுக்கு முன்னர் மோட்டோ நிறுவனத்திற்கு ஹிட் ரேட்டை ஏற்றிய மொபைல்களில் ஒன்று Moto E. 

மோட்டோ E4 moto E4

அதிலேயே மூன்று தலைமுறை (3 Gen) போன்கள் வந்துவிட்ட நிலையில், தற்போது மோட்டோ E சீரிஸின் இரண்டு புதிய போன்களை அறிமுகம் செய்துள்ளது லெனோவா. E சீரிஸின் நான்காவது தலைமுறையான இவற்றிற்கு மோட்டோ E4 மற்றும் E4+ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு நௌகட், ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர், அதிக நேரம் நீடிக்கும் பேட்டரி இதற்கு முந்தைய வெர்ஷன்களை விடவும் அசத்தலாக வந்திருக்கிறது இந்த E4 சீரிஸ். 

மோட்டோ E4:

5 இன்ச் டிஸ்ப்ளே, Snapdragon™ 425 பிராஸசர், 2 ஜி.பி ரேம், 16 ஜி.பி இன்டர்னல் மெமரி, 2800 mAh ரிமூவல் பேட்டரி, 4.1 LE ப்ளூடூத் ஆகியவற்றோடு வந்திருக்கிறது மோட்டோ E4. ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர், ரிமூவல் பேட்டரி, மெட்டல் பாடியுடன் கூடிய காம்பேக்ட் டிசைன், ஃபிளாஷ் உடன் கூடிய கேமராக்கள் போன்றவை எல்லாம் இதன் ஹைலைட்ஸ். ஆனால் சிங்கிள் நானோ சிம் ஸ்லாட் என்பது மைனஸ்.

மோட்டோ E4

கேமராவைப் பொறுத்தவரை 8 மெகா பிக்ஸல் ரியர் கேமரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா ஆகியவை இருக்கின்றன. இரண்டு கேமராக்களுக்கும் ஃபிளாஷ் இருக்கிறது. ஆண்ட்ராய்டு 7.1 ஓ.எஸ் என்பது சிறப்பு.  வைப்ரேஷன், பிராக்ஸிமிட்டி, லைட், ஏக்சிலரோ மீட்டர், மேக்னட்டோ மீட்டர் ஆகியவற்றோடு ஃபிங்கர் பிரின்ட் சென்சாரையும் சேர்த்து, தன் சென்சார் டிபார்ட்மென்ட்டை ஸ்ட்ராங் ஆக்கியிருக்கிறது மோட்டோ. மொத்தத்தில் ஓ.எஸ், கேமரா, டிசைன் ஆகியவை மட்டும் கவர்கின்றன. 7000 ரூபாய் பட்ஜெட்டில் இந்தியாவிற்கு வந்தால் மோட்டோ E4-க்கு குட்மார்க்ஸ் கியாரண்டி.

மோட்டோ E4 ப்ளஸ்:

மோட்டோ E4 ப்ளஸ்

E3 பவர் போலவே பேட்டரியில் மிக வலிமையாக இருக்கிறது மோட்டோ E4 ப்ளஸ். 5.5 இன்ச் HD டிஸ்ப்ளே, Qualcomm® Snapdragon™ 427 பிராஸசர், 2 ஜி.பி ரேம், ஃபிங்கர் பிரின்ட் சென்சார் ஆகியவற்றோடு 5000 mAh பேட்டரியை இணைத்து E4-க்கு பவர் ஏற்றியுள்ளது மோட்டோ. 16 ஜி.பி மற்றும் 32 ஜி.பி என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கும். E4-ல் இருப்பது போலவே இதிலும் சிங்கிள் நானோ சிம் ஸ்லாட்தான். மேலும் பேட்டரியும் நான் ரிமூவல் வகையைச் சேர்ந்தது. 

8 எம்.பி ரியர் கேமரா மற்றும் 5 எம்.பி முன்பக்க கேமரா என அதே காம்போதான் இதிலும். இரு கேமராக்களிலும் சிங்கிள் LED ஃபிளாஷ் இருக்கிறது. ஸ்டைலிஷ் ஆன டிசைன், ஆண்ட்ராய்டு 7.1, 5000 mAh பேட்டரி, கேமரா ஆகியவைதான் இதன் ஹைலைட்ஸ். 8,000 முதல் 10,000 ரூபாய்க்குள் இதன் விலை இருக்கலாம். 

மோட்டோ E4 ப்ளஸ்

மோட்டோ Z2 ப்ளே மற்றும் மோட்டோ C மாடல்களை சமீபத்தில்தான் இந்தியாவில் வெளியிட்டது மோட்டோ. ஆனால் மோட்டோ E4 மற்றும் E4+ இந்தியாவிற்கு எப்போது வரும் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த மாத இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement