வெளியிடப்பட்ட நேரம்: 09:28 (14/06/2017)

கடைசி தொடர்பு:12:19 (14/06/2017)

பழைய சிறப்புகள் புதிய நோக்கியா 3310-ல் இருக்கிறதா? #VikatanExclusive #FirstLook

நோக்கியா 3310

முதல் காதல் எப்போதும் ஸ்பெஷல்தான். அதுபோலதான் நமது முதல் மொபைலும். நம்மில் பெரும்பாலானோருக்கு முதல் முதலில் அறிமுகமான மொபைல் என்றால் அது நோக்கியா 3310தான். ஸ்னேக் கேம் ஆடாமல் 2000 த்தின் ஆரம்ப ஆண்டுகளில் தூங்கியவர்கள் அபூர்வம். நீடித்து நிற்கும் பேட்டரி, ஸ்னேக் கேம், கணீர் நோக்கியா ரிங்டோன், நாமே கம்போஸ் செய்யும் ரிங்டோன் என அப்போது நோக்கியா 3310 ஒரு சூப்பர் ஸ்டார்தான். அதன் பின் நாம் மாற்றிய மொபைல் மாடல்கள் மறந்து போயிருக்கலாம். ஆனால், அந்த முதல் மொபைல்... மறக்காது.

அந்த நாஸ்டாலஜியாவை நம்பி மீண்டும் 3310-ஐ களம் இறக்கியிருக்கிறது நோக்கியா. 4000 ரூபாய்க்கே ஸ்மார்ட்போன், 5000 ரூபாய்க்கு ஃபிங்கர் பிரின்ட் சென்ஸார் கொண்ட போன்கள் எல்லாம் வந்துவிட்டன. ஆனாலும், நோக்கியா ரசிகர்கள் தங்களைக் காப்பாற்றுவார்கள் என நம்பி 3310 மாடலை சாதா மொபைலாகவே கொண்டு வந்திருக்கிறார்கள். விலையிலும் கூட ஒரு கனெக்‌ஷன் வேண்டுமென 3,310 ரூபாய்க்கே ஃபிக்ஸ் ஆகிவிட்டார்கள்.

அதெல்லாம் சரிதான். புது நோக்கியா நம்மை மீண்டும் அந்தப் பழைய காலத்துக்குக் கொண்டு சென்றதா எனக் கேட்டால், ஆண்ட்ராய்டு மொபைல் போல ஹேங் ஆகத்தான் வேண்டியிருக்கிறது. 

பேலியோ டயட் இருந்து ஒல்லியானது போல இருக்கிறது புது நோக்கியா. கைகளில் உறுதியாக நிற்கும் பழைய 3310-ன் தோரணை இதில் மிஸ்ஸிங். புல்லட்டை உதைத்து ஸ்டார்ட் செய்வதுதான் கெத்து. எலக்ரிட் ஸ்டார்ட் வைத்த புல்லட்டை போல இந்தப் புது நோக்கியா சிம்பிளாக இருக்கிறது. பழைய நோக்கியா 133 கிராம். புது நோக்கியா 79.6 கிராம்தான். அது வசதி என்றாலும், டச் அண்ட் ஃபீலில் அந்த பழைய நோக்கியாவை மிஸ் செய்வது போன்ற உணர்வு. 

3310  3310

மொபைல் பெருசு என்றாலும் திரை அளவு 1.5 இன்ச்தான். புது நோக்கியா 2.4 இன்ச் திரை என்பதால் ஏதோ வித்தியாசமாக இருக்கிறது. 
பழைய நோக்கியா வந்த காலத்தில் சோஷியல் மீடியா கிடையாது. செல்ஃபி என்ற வார்த்தையே கிடையாது. அதனால், கேமராவும் மொபைலில் கிடையாது. புது நோக்கியா வரும்போது அனைத்துமே உண்டு. ஆனால், கேமராவின் தரம் மற்ற போட்டி மொபைல் மாடல்களை விட குறைவு. எனில், எதற்கு அந்தக் கேமரா? அதுவும் இல்லாமல், இன்னும் விலை குறைத்திருக்கலாம். 

கடைசியாக ஸ்னேக் கேம். சினிமாவில் மட்டுமல்ல; வீடியோ கேமிலும் ரீமேக் ஒரிஜினல் அளவுக்கு வருவது சிரமம் என்பதற்கு இன்னொரு உதாரணம் இது. பாம்பு நகரும் திசையே வித்தியாசமாக இருக்கிறது. நாள்கணக்காக நாம் விளையாடிய ஒரு விளையாட்டை, 5 நிமிடங்கள் கூட தொடர்ந்து விளையாட முடியவில்லை. இந்த 15 ஆண்டுகளில் நாம் நம் பொறுமையை இழந்திருக்கிறோம் என்று சொன்னாலும், புதிய ஸ்னேக் கேம் அவ்வளவு சுவாரஸ்யமில்லை என்பதுதான் உண்மை.

 

 

பேட்டரியில்தான் புது நோக்கியா ஸ்கோர் செய்கிறது. பழைய மாடலில் 900mAh பேட்டரி; 55 மணி நேரம் ஸ்டாண்ட் பை டைம். புது நோக்கியாவில் 1200mAh. 31 நாள் ஸ்டாண்ட் பை என்கிறார்கள்.

இன்றைய டெக்னாலஜி வளர்ச்சி மற்றும் சந்தையின் அளவை வைத்துப் பார்க்கும்போது ரூ. 3310 என்பது கொஞ்சம் அதிகம்தான். நாஸ்டால்ஜியாவுக்காக வாங்குவது என்றால் இந்த புது 3310 ஏமாற்றம் தரலாம். பேக்கப் மொபைலுக்காக வாங்கப் போகிறீர்கள் என்றால் யோசிக்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்