Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தினம் 4 ஜி.பி..! பி.எஸ்.என்.எல்-ன் டேட்டா பதிலடி #BSNLChaukka

டேட்டா

கிரிக்கெட் ஸ்கோர் கார்டை விட மக்கள் ஆர்வமாகப் பார்க்கத் தொடங்கியிருப்பது டேட்டா கார்டு பிளான்களைதான். ஜியோ வந்தபின் சறுக்கு மர விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் டெலிகாம் நிறுவனங்கள். இந்தமுறை பெரிய சறுக்கு சறுக்கியிருக்கிறது பி.எஸ்.என்.எல். ஜியோவே நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டாதான் கொடுக்கிறது. ஆனால், “இந்தா... 4 ஜிபி டேட்டா வச்சுக்கோ” என அறிவித்திருக்கிறது பி.எஸ்.என்.எல். இந்த பிளான் என்ன, எந்த அளவுக்கு மலிவான ஒன்று, நம்பி நெட்வொர்க் மாறலாமா? பல கேள்விகள் நமக்கு எழுகின்றன.

பிளான் வசதிகள்:

பி.எஸ்.என்.எல் செளக்கா( BSNL Chauka) இதுதான் இத்திட்டத்தின் பெயர். ப்ரீபெய்டு சிம் கார்டுகளுக்குத் தரப்பட்டிருக்கும் இந்த டேட்டா பிளானின் விலை ரூபாய் 444. வேலிடிட்டி 90 நாள்கள். இந்த 90 நாள்களும் தினம் ஒன்றுக்கு 4 ஜிபி வரை டேட்டா இலவசம். இன்று முதல் ஸ்பெஷல் ஆஃபர் அமலுக்கு வருவதாக பி.எஸ்.என்.எல் அறிவித்திருக்கிறது.

எப்படி இந்த ஆஃபரை பெறுவது:

1) பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் போர்ட்டலுக்குச் செல்லவும்
2) உங்கள் பி.எஸ்.என்.எல் எண்ணை டைப் செய்யவும். எண்ணை உறுதி செய்ததும், உங்கள் டெலிகாம் சர்க்கிளைத் தேர்ந்தெடுக்கவும்
3) மின்னஞ்சல் போன்ற மற்ற தகவல்களைக் கொடுத்து அடுத்தப் பக்கத்துக்குச் செல்லவும்.
4) அந்தப் பக்கத்தில் “ STV among top up" என்ற ஐகானை க்ளிக் செய்யவும். அதில் “data voucher among data”வை தேர்ந்தெடுக்கவும்.
5) பட்டியலில் Chauka_444 என்ற பிளானைத் தேர்தெடுத்து proceed கொடுக்கவும். 
அதன் பின் வழக்கம் போல் பேமென்ட்டை முடிக்கவும். 

விலை:

ஜியோ பிளான்படி 28 நாளைக்கு 28 ஜிபி 4ஜி டேட்டாவுக்கு 303 ரூபாய் ஆகிறது. ஏர்டெல் இதையே 349 ரூபாய்க்குத் தருகிறது. ஆனால், பி.எஸ்.என்.எல் பிளான்  90 நாள்களுக்கு 444 ரூபாய்தான். அதுவும் தினமும் 4 ஜி.பி என்பதால் 360 ஜி.பி டேட்டாவை 444 ரூபாய்க்குக் கிடைக்கிறது. 4ஜி, 3ஜி வேகம் வித்தியாசம் இருந்தாலும் இருப்பதிலே மலிவான பிளான் இதுதான். வேகமும் 2ஜி அளவுக்குச் சோதிக்காது என்பதால் நிறைய வாடிக்கையாளர்கள் இதற்கு மாறும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், எதையும் சமாளிக்கும் ஜியோ இந்தத் திட்டத்துக்கும் சவாலாக புது பிளான்களை அறிவிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. 

இது தவிர, பி.எஸ்.என்.எல் Plan 149ன் படி இருந்த 500 எம்.பி என்பதை 1 ஜி.பி ஆக மாற்றியிருக்கிறார்கள். Triple ace என்ற பிளான்படி 333ரூபாய்க்குத் தினமும் 3 ஜி.பி டேட்டா தந்து கொண்டிருக்கிறார்கள்.

பி.எஸ்.என்.எல்லுக்கு ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கும் முக்கியமான ஒரு வித்தியாசம் உண்டு. பி.எஸ்.என்.எல் டேட்டா 3ஜி வேகம்தான். ஜியோவும் ஏர்டெல்லும் வோடோஃபோனும் 4ஜி சேவைகளை வழங்கி வருகின்றன. 

ஜியோ மாதம் 303 ரூபாய்க்கு தினமும் 1 ஜிபி 4ஜி டேட்டா வழங்குகிறது. ஏர்டெல், குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் 349 ரூபாய்க்குத் தினமும் ஒரு ஜிபி. வழங்குகிறது. வாய்ஸ் கால்களும் இலவசமாக வழங்குவது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் 349 ரூபாய் பிளான் நல்ல மாற்று என்றாலும், அத்திட்டம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமென்பதுதான் சிக்கல்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement