ஒன் பிளஸ் 5; சென்னையில் புக்கிங் படுஜோர்! | Bookings started for one plus 5 models in Chennai.

வெளியிடப்பட்ட நேரம்: 19:06 (24/06/2017)

கடைசி தொடர்பு:21:28 (24/06/2017)

ஒன் பிளஸ் 5; சென்னையில் புக்கிங் படுஜோர்!

சீனா மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒன் பிளஸ், அண்மையில் அதன் புதிய தயாரிப்பான  ஒன் பிளஸ் 5 மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது. 


இதுவரை இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் மூலமாக மட்டும் விற்பனை செய்து வந்த அந்நிறுவனம், இந்த முறை ஒன் பிளஸ் 5 மாடலுக்காகாவே பிரத்யேகமான  புதிய கடைகளை சென்னை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் அமைத்திருக்கிறது. 


இந்நிலையில், சென்னை மீனம்பாக்கத்தில் இதற்காக ஒரு கடை அமைக்கப்பட்டிருந்தது. இன்று மதியம் மூன்று மணி முதல் இந்த கடை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பலர் வரிசையில் காத்திருந்தனர். புதிய மாடல் போன்களை வரிசையில் நின்று வாங்கியும் முன்பதிவும் செய்து சென்றனர். ஒன் பிளஸ் 5 மாடல் விற்பனை கடந்த 22-ம் தேதி இந்தியாவில் தொடங்கியது. ஆனால், சென்னையில் இதன் விற்பனை இன்றுதான் தொடங்கியது.