ஆப்பிள் யூஸர்களுக்கு உதவும் 5 ஐ-மெசேஜ் ஆப்ஸ்..! #iMessageApps | best 5 iMessages apps for apple users

வெளியிடப்பட்ட நேரம்: 22:12 (26/06/2017)

கடைசி தொடர்பு:22:12 (26/06/2017)

ஆப்பிள் யூஸர்களுக்கு உதவும் 5 ஐ-மெசேஜ் ஆப்ஸ்..! #iMessageApps

ஐமெசேஜ் ஆப்பிள்

ஐமெசேஜ் ஆப்ஸ் என்னென்ன என்பதைப் பற்றிப் பார்க்கும் முன் ஐமெசேஜ் என்பது என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். ஐமெசேஜ் என்பது  ஆப்பிள் வழங்குகின்ற ஓர் இலவச சேவை. அது ios பயனாளர்கள் ஐஃபோன், ஐபாட் மூலம் குறுஞ்செய்தி அனுப்புவதற்கான செயல்திறனை அளிக்கும்.

ஐமெசேஜ் மூலம் குறுஞ்செய்தி அனுப்ப முற்பட்டால் அந்தந்த சாதனங்களின் மெசேஜ் ஆப்ஸ் மெசேஜ் பெற வேண்டியவரை(recipient) அடையாளம் கண்டு அவர்களுக்கு அனுப்பும். உரியவர் ios பயனாளராக இருந்தால் ஐமெசேஜாகவும் இல்லையெனில் வழக்கமான மெசேஜாகவும் அந்த குறுஞ்செய்தி சென்று சேரும். அதுமட்டுமின்றி குழு அமைத்து உரையாடும் வாய்ப்பையும் இந்த ஐமெசேஜ் நமக்கு அளிக்கிறது. கிட்டத்தட்ட ஆப்பிள் யூஸர்களுக்கான ஒரு வாட்ஸ்அப் என சொல்லலாம்.

 ஐ! நல்லாருக்குள்ள… இதுவே இப்படி இருக்கிறதென்றால் இதனை பயன்படுத்தும் ஆப்ஸ் எப்படி இருக்கும். அதைப் பற்றியும் தெரிந்து கொள்ள தொடர்நது ஸ்வைப் பன்னுங்க பாஸ்!

ஈ.டி.ஏ(ETA): 
 சமீபத்தில் கூகுள் மேப்ஸ்-ற்கென்றே உருவான மிக நுட்பமான செயல்பாகம் தான் இந்த ஈ.டி.ஏ. உங்களது இணைப்பில்(contacts) இருப்பவர்களோடு உங்களது பயனங்களைப் பகிர்ந்துகொள்ளும். ஐமெசேஜ்-ற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஆப் உங்களது நண்பர்கள் நீங்கள் செல்லும் இடத்தை அறியவும் எப்படி அங்குச் சென்றீர்கள் என்பதையும் கண்டறியச் செய்யும். ஆப்பிள் மேப்ஸ்,கூகுள் மேப்ஸ் ஆகியவற்றில் திசைகளைச் சரியாக செலுத்தக்கூடிய செய்திறன் போன்ற தன்மைகள் இந்த ஐமெசேஜ் ios ஆப்ஸிலும் அமைந்துள்ளது.
      
ஃபேன்டேங்கோ மூவிஸ்(Fandango movies):
Ios ஐமெசேஜ் ஆப்ஸில் பெரிய அளவிலான பெயர் கொண்ட ஒன்று இந்த மூவிஸ் ஆப். நீங்கள் ஏற்கெனவே டிக்கெட்டிங் சார்ந்த ஆப்ஸுடன் பழக்கப்பட்டவாராக இருப்பின் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் இது செய்து கொடுக்கும். மேலும் உங்களது ஐமெசேஜ் நண்பர்களுடன் நீங்கள் ஒன்றாகச் சேர்ந்து படங்களுக்குச் செல்லவும் புதுப்படங்களின் பட்டியலைக் காணவும் பேருதவி புரியும்.

 

ஹூ ‘ஸ் -இன்(Who’s in):
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்பொழுது எங்கெங்கும் பரப்பி வருகின்ற ஒரு விசித்திரமான ஆப் தான் இது. எதைச் செய்தாலும் ப்ளான் செய்து செய்ய வேண்டும் அல்லவா. அதுபோல நண்பர்களுடன் திட்டமிட்டு நிகழ்ச்சிகளை நிகழ்த்த இது உங்களுக்கு உதவும். உணவகங்கள், தியேட்டர் போன்ற இடங்களுக்குச் செல்ல உங்களது ஐமெசேஜ் நண்பர்களுடன் இணைந்து கலந்துரையாடி அவர்கள் வருவார்களா மாட்டார்களா என்பதையும் இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.


ஸ்கொயர் கேஷ்(Square cash):
கடன் அன்பை முறிக்கும். அதனால் தான் சொல்கிறேன் நண்பர்களுக்குள் கடன் பிரச்சனை இல்லாமல் இருங்க பாஸ். அதற்கு உதவி புரிவதற்குத் தான் இந்த ஸ்கொயர் கேஷ் வந்துள்ளது. இந்த ஆப் ஐமெசேஜ் மூலம் உங்களது நண்பர்களுக்கு டாலர்களைக் கொடுக்க இயலும். ஸ்கொயர் கேஷ் தளத்தில் கணக்கு இருப்பவர்கள் தான் அதன் மூலம் அனுப்பப்படும் பணத்தைப் பெற முடியும் என்பதல்ல.டெபிட் கார்டு, வங்கிகளை வைத்தும் பெற முடியும்.


லெட்’ஸ் பக் இட்(Let’s puck it):
 இதுவொரு சிறந்த விளையாட்டு ஆப். இதன் விளையாட்டு முறைமை மிகவும் எளிமையானது. கிராஃபிக்ஸ் பளபளப்பான தன்மையுடையது. விளையாட்டைத் தொடங்கும் முன்னரே பந்தயம் வைத்தல் போன்ற நிறைய விஷயங்களும் இதில் உண்டு.
 


டிரெண்டிங் @ விகடன்