ஆன்லைன் பேங்கிங்... பாதுகாப்பாய் இருக்க உதவும் 8 டிப்ஸ்..! #SafeBanking

ஆன்லைன்

ஆன்லைன் வங்கிச்சேவைகளை பயன்படுத்தாமல் இருப்பது இனி சாத்தியமில்லை. அதே சமயம், வெள்ளிக்கிழமைதோறும் புதுப்படம் வெளியாவது போல மாதந்தோறும் எதாவது வைரஸ் பற்றிய செய்திகள் வெளியாவதும் நடக்கிறது. ஆபத்துகள் நிறைந்த இணையத்தில் மற்ற விஷயங்களை எல்லாம் கூட கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். வங்கி, பணம் தொடர்பான விஷயத்தில் அப்படி இருக்க முடியாது அல்லவா? உங்கள் வங்கிக் கணக்கை பாதுகாப்பாய் கையாள உதவும் சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

URL

உங்கள் வங்கிக்கணக்கை எந்த இணையதள முகவரி மூலம் பயன்படுத்துகிறீர்கள் என்பதை கவனியுங்கள். சரியான முகவரியை புக்மார்க் செய்து அது மூலமாக மட்டுமே உள்ளே நுழையுங்கள். கூகுள் செய்து, அதில் வரும் லின்க் மூலம் லாக் இன் செய்யாதீர்கள்.

இரண்டு அடுக்கு பாதுகாப்பு (two factor authentication)

லாக் இன் ஐடி மற்றும் பாஸ்வேர்டு இருந்தால்தான் ஆன்லைன் அக்கவுண்ட்டுக்குள் நுழைய முடியும். பாஸ்வேர்டு மட்டுமே இல்லாமல், கூடுதலாக இன்னொரு லேயர் பாதுகாப்பையும் சேர்ப்பதுதான் two factor authentication. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP கிடைக்கும்படி செய்வதன் மூலம் இந்தப் பாதுகாப்பை உறுதிச் செய்யலாம். ஒருவேளை நம் பாஸ்வேர்டை யாராவது தெரிந்துகொண்டாலும் இந்த OTP இல்லாமல் நுழையவே முடியாது.

பாதுகாப்பான பாஸ்வேர்டு

சில வங்கிகள் பாஸ்வேர்டை நம்மையே தேர்வு செய்யச் சொல்லும். அப்படி இருந்தால், கடினமாக பாஸ்வேர்டை உருவாக்குங்கள். குறைந்தபட்சம் 8 கேரக்டர்களும், அதில் எண்களும் எழுத்துகளும் ஸ்பெஷல் கேரக்டர்களும் கலந்து இருப்பதும் முக்கியம். பெரும்பாலான வங்கிகளே இதைக் கட்டாயப்படுத்தியிருக்கும். இல்லையென்றாலும், நீங்கள் இதைக் கவனத்தில் கொள்ளுங்கள். பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றிக்கொண்டேயிருங்கள்.

மானிட்டர் செய்யுங்கள்:

வாரம் ஒருமுறையாவது உங்கள் அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட்டை எடுத்துப் பார்க்கவும். பெரியத் தொகை செலவாகியிருந்தால், அது நீங்கள் செய்ததுதானா என்பதைக் கவனிக்கவும். 

நீங்கள் லாக் இன் செய்யும் நேரம் மற்றும் தேதியை பார்க்க முடியும். அனைத்து லாக் இன்களும் உங்களுக்குத் தெரிந்து நடந்திருக்கிறதா என்பதையும் அடிக்கடி சோதனை செய்யவும்.

பாதுகாப்பான கணினி:

நீங்கள் லாக் இன் செய்யும் சிஸ்டம் பாதுகாப்பானதுதானா என்பதை உறுதிச் செய்யுங்கள். ஆன்டி வைரஸ் இல்லாத சிஸ்டம், பொது நெட்வொர்க்கில் இருக்கும் சிஸ்டம் ஆகியவற்றை தவிர்க்கவும். ஆப்ரேட்டிங் சிஸ்டம் அப்டேட் ஆகியிருக்கிறதா என்பதையும் கவனிக்கவும். incogninto windowல் லாக் இன் செய்வது நல்லது. 

ஆன்லைன்


மின்னஞ்சல்களை கவனிக்கவும்:

எந்த வங்கியும் உங்கள் லாக் இன் தகவல்களை மின்னஞ்சல்கள் மூலம் கேட்காது. அப்படி கேட்டு வரும் மின்னஞ்சல்களை யோசிக்காமல் டெலீட் செய்துவிடவும். வங்கியில் இருந்து மின்னஞ்சல்கள் வந்தால், அந்த இமெயில் முகவரியை கவனமாக பார்க்கவும். ஒரே ஒரு எழுத்தை மட்டும் மாற்றி போலி முகவரி மூலம் உங்கள் தகவல்களை திருடவும் வாய்ப்பு உண்டு.

லாக் அவுட் செய்ய மறக்க வேண்டாம்:

உங்கள் சிஸ்டமாகவே இருந்தாலும், பரிவர்த்தனைகளை முடித்த பின், லாக் அவுட் செய்ய மறக்க வேண்டாம். முடிந்தால், குக்கீஸ்(Cookies) மட்டும் கேஷ்(Cache) மெமரிக்கைகளை க்ளியர் செய்து விடுங்கள்.

நோட்டிஃபிகேஷன்ஸ்:

உங்கள் அக்கவுண்ட்டில் என்ன மாதிரியான  ட்ரான்சாக்‌ஷன்ஸ் நடந்தாலும் மெஸெஜ் வரும்படி வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கே  தெரியாமல், யாராவது உங்கள் அக்கவுண்ட்டையோ, கிரெடிட்/டெபிட் கார்டையோ பயன்படுத்தினாலும் உங்களால் உடனே ஆக்‌ஷன் எடுக்க முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!