Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரெட்மியை சமாளிக்குமா இன்ஃபோகஸ் டர்போ5? - புதிய பட்ஜெட் மொபைல் #ChargeLessDoMore

இன்ஃபோகஸ்

இந்திய மொபைல் சந்தையை பொறுத்தவரை, நடுத்தர வர்க்க மக்களுக்கு என்ன  தேவைப்படும் என்று ஆராய்ந்து அதில் கவனம் செலுத்தினால் போதும். ஒட்டுமொத்தச் சந்தையையும் வளைத்து விடலாம் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் ஜியோமி நிறுவனம் தான்.
ஓப்போ, விவோ என மற்ற சீன நிறுவனங்கள் பட்ஜெட் செக்மென்டில் தடுமாறி கொண்டிருக்கின்றன. ஆனால், மக்கள் ஸ்மார்ட்போன்களை அதிக நேரம் சார்ஜ் போட விரும்பாமல் எப்போதும் கையில் வைத்திருக்கவே விரும்புகிறார்கள் என்று உணர்ந்திருக்கிறது ஜியோமி. அதற்கேற்றவாறு, திறன்மிக்க பேட்டரிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. அதனால்தான், இன்றைக்கு பட்ஜெட் சந்தையில் அதிகமாக விற்பனையாகின்றன ரெட்மி மொபைல்கள்.

விற்பனைக்கு வந்த சில விநாடிகளில் விற்று தீர்ந்து விடுகின்றன ரெட்மி மொபைல்கள். அப்படி என்ன இருக்கிறது ரெட்மி மொபைலகளில்? 4000 mAh பேட்டரி,13 மெகா பிக்சல் கேமரா, 5 இன்ச் டிஸ்பிளே என குறைந்த விலையில் நிறைய வசதிகளை அள்ளி கொடுக்கிறது. இது வரைக்கும், இந்த செக்மென்டில் இந்த அளவு வசதிகளை வேறு நிறுவனங்களால் கொடுக்க முடியவில்லை.

பட்ஜெட் செக்மென்டில் இப்போதுவரை ரெட்மி தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், “ரெட்மி எல்லாம் சும்மா பாஸ்... நாங்க வர்றோம் பாருங்க” என  அதிரடியாக களத்தில் இறங்கியிருக்கிறது அமெரிக்க நிறுவனமான இன்ஃபோகஸ். கடந்த 2015 ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் நுழையும்போதே குறைந்த விலை ஸ்மார்ட்போனோடுதான் அறிமுகமானது.

இந்நிலையில் தனது புதிய ஸ்மார்ட்போனான InFocus Turbo 5 ஐ நேற்று டெல்லியில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். 

InFocus Turbo 5 சிறப்பம்சங்கள்

  • 5.20 இன்ச் 720x1280 டிஸ்பிளே.
  • 1.3GHz குவாட்கோர் மீடியாடெக் புராசஸர்
  • 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரி.
  • 13 மெகா பிக்சல் பின்புற கேமரா.
  • 5 மெகா பிக்சல் முன்புற கேமரா.
  • ஆண்ட்ராய்டு 7.0 நொளகட் இயங்குதளம்.
  • 5000mAh பேட்டரி திறன்.

ரெட்மி மொபைல்களை விட சற்று பெரிய திரை, அதிகமான பேட்டரி திறன் என  இவ்வளவு வசதிகளை கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 6999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி என்றால் 7999 ரூபாய். இரண்டு சிம் வசதி உடைய இந்த ஸ்மார்ட்போனில் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் வசதியும் உள்ளது. இதன் மூலமாக 0.5 நொடியில் உங்கள் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்ய முடியும் என்கிறது இன்ஃபோகஸ்.

5000mAh பேட்டரி திறன் இருப்பதால் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் தாக்குப்பிடிக்கும். மேலும் 34 நாட்கள் ஸ்டான்ட்பை பேட்டரி, ரிவர்ஸ் சார்ஜிங் முறை மூலமாக மற்ற மொபைல்களுக்கும் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம் என வசதிகள் ஏராளம்.

தோற்றத்திலும் ரெட்மி மொபைல்கள் போலவே இருக்கிறது InFocus Turbo 5. 8.95 மி.மீ தடிமன் 164 கிராம் எடை ,புல் மெட்டல் பாடி என வடிவமைப்பிலும் குறை இல்லை. 

infocus

விலை குறைவு, அதிக வசதிகள் என்பது ரெட்மியின் ப்ளஸ் என்றாலும், விமர்சனங்களுக்கும் குறைவில்லை. ”ரொம்ப சூடாகுது பாஸ். அயர்ன்பாக்ஸே தேவையில்லை”, “கேமாராவும் முன்னாடி மாதிரி தெளிவில்லை”, “வாம்மா மின்னல் மாதிரி ஆன்லைன்ல வந்ததும் வித்துடுது” என என ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீது விமர்சனங்கள் எழத்தொடங்கியிருக்கும் நிலையில், ரெட்மியை விட கொடுக்கும் விலைக்கு அதிகமாகவே வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஜூலை 4 ம் தேதி முதல் அமேசான் இணையதளத்தில் விற்பனைக்கு வருகிறது இன்ஃபோகஸ் டர்போ5. இந்த ஸ்மார்ட்போனை மக்கள் வாங்கி பயன்படுத்திய பின்பு நல்ல விமர்சனங்கள் வந்தால், ரெட்மிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close