கதிராமங்கலம் முதல் பிக்பாஸ் வரை... ஃபேஸ்புக்கில் நாம் காட்டும் முகம் இதுதான்! #WorldEmojiDay

ஃபேஸ்புக்

கடந்த சில ஆண்டுகளில் உலகின் எல்லா மூலைக்கும் சென்று சேர்ந்த ஒரு விஷயம் எமோஜி. உரையாடல் இல்லாத உணர்வுகள் பேசும் எமோஜிக்கள் 90 களில் செல்போனுக்குள் இடம்பெற துவங்கின. இன்று எல்லா உணர்வுகளையும் ஃபேஸ்புக்கில் எமோஜிக்களாக காட்ட முடியும். இந்த எமோஜியை கொண்டாவும் ஒரு நாள் இருக்கிறது. உலகம் முழுவதும் ஜூலை 17ம் தேதி உலக எமோஜி தினமாக கொண்டாடப்படுகிறது..

ஆன்லைனை பொறுத்தமட்டில் யாருக்கும் பாகுபாடு இல்லை. கதிராமங்கலத்தில் போராட்டம் என்றால் அரசுக்கு எதிராக ஆங்க்ரி எமோஜி.. அதே சமயம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்யும் காமெடிக்கு ஹா..ஹா... எமோஜி என நம் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கும் மொழியாக மாறிவிட்டன எமொஜிக்கள்.

மக்களின் மனநிலையை நன்கு டேட்டாக்களாக மாற்றத்தெரிந்த நிறுவனங்களில் ஒன்று தான் ஃபேஸ்புக். உலகம் முழுவதும் ஆன்லைனில் லைக் மட்டும் செய்து வந்தவர்களை பல்வேறு உணர்வுகளை எமோஜிக்கள் மூலம் வெளிப்படுத்த வைத்தது லைக், லவ், ஹாஹா..வாவ், சோகம், ஆங்க்ரி என மனித உணர்வுகளை ஆறு எமோஜிகளுக்குள் கொண்டு வந்தது. 

காதலியின் புகைப்படங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு ஹார்ட் எமோஜி போட்டதும் ஒபாமா அதிபர் பதவியிலிருந்து வெளியேறும் தருணத்தில் ஹார்ட் எமோஜிக்கள் பறந்ததை பாரும் மறுக்கவே முடியாது. சிரியாவில் அய்லான் கடற்கறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டபோதும், சிரியா தாக்குதலில் அடிபட்டு சிறுவன் ஆம்புலன்ஸில் அமர்ந்திருந்த புகைப்படங்களுக்கு உலகமே சோக எமோஜிக்களால்தான் கண்ணீர் விட்டது. 

நெடுவாசல், ஜல்லிக்கட்டு போராட்டங்களில் போராடியவர்களுக்கு லைக், லவ் என வாரி வழங்கியவர்கள் ஜி.எஸ்.டி ஹோட்டல் பில்களில் ஆங்க்ரி முகம் காட்டினார்கள். எமோஜி மக்கள் பிரச்னையை மக்களே உணர்ச்சியாக வெளிப்படுத்த உதவியது.. இவர்களின் எமோஜி போரில்,  பிக்பாஸ் கமல் முதல் அமெரிக்க அதிபர்  ட்ரம்ப் வரை யாரையும் விட்டு வைக்கவில்லை.  அம்மாக்கள் தினம் அன்று நன்றி கூறும் பர்ப்பிள் பூ எமோஜியையும், ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக ப்ரைடு எமோஜியையும் போடுவதை ஃபேஸ்புக் சமூகம் தன் கடமையாக பார்க்கிறது.

ஒரே குடையின் கீழ் அனைவரையும் இணைக்கும் ஃபேஸ்புக் மனிதர்களுக்கு எமோஜி முகம் காட்ட வைத்திருப்பது வசதி என்றாலும். அதன் பின் வர்த்தகமும் உள்ளது. நீங்கள் இத்தனை ஹார்ட், ஹாஹா எமோஜிக்கள் வழங்கி இருக்கிறீர்கள். அதற்கு அப்படி ரியாக்ட் செய்கிறீர்கள் என்பது வரை உங்களை பின் தொடர்ந்து வர்த்தகம் செய்கிறது ஃபேஸ்புக்.

எமோஜி

ஒரு சராசரி ஃபேஸ்புக் பக்கத்துக்கு 28 % - ஹார்ட், 27 % - ஆங்க்ரி, 17 %- ஹாஹா, 15% - சோகம், 12% - வாவ் எமோஜிக்கள் கிடைக்கின்றன. சராசரியாக ஒரு ஃபேஸ்புக் பதிவுக்கு 3.2 - ஹார்ட், , 3.2- ஹாஹா, 3 - வாவ், 1.9 - சோகம், 1.8 - ஆங்க்ரி, 1 - லைக் கிடைக்கிறது.. 

இதனை ஒரு சோதனையாக செய்து பாருங்கள். கீழுள்ள லின்க்கை க்ளிக் செய்து அதில் வரும் பத்து புகைப்படங்களை பார்த்தால் உங்கள் மனதில் எந்த ரியாக்‌ஷன் தோன்றுகிறது என்பதை வெளிப்படுத்துங்கள். 

லின்க்: https://goo.gl/HPRkmn

மனிதர்கள் உணர்வுகளை நேரடியாக வெளிப்படுத்தும் மனநிலை கொண்டவர்கள். அவர்களின் உணர்வுகளுகான அளவீடுகளாகவும், நாட்டில் நடக்கும் விஷயங்களுக்கு விமர்சனமாகவும் இந்த எமோஜிக்கள் மாறியுள்ளன. எமோஜிக்கள் சூழ் உலகில் சிரிப்போம், காதலிப்போம், கோவப்படுவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!