Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நம்ம ஊர் ஐமேக்ஸ் என்பது நிஜமாகவே ஐமேக்ஸ் திரைதானா? #iMax

ஐமேக்ஸ்

“ஜி.எஸ்.டி.க்கு அப்புறமா சாதா தியேட்டர்லையே டிக்கெட் விலை இப்படி ஏறிருச்சே... அப்போ முன்னாடியே அவ்வளவு விலை விற்ற ஐமேக்ஸ் இப்போ என்னவாகிருக்கும்” னு பலரும் யோசிச்சிருப்பீங்க. அது இப்போ 360 ரூபாய்ல இருந்து 460 ரூபாய் ஆகிருச்சு பாஸ். அதுவும் 3டிக்கு கூடுதலா 30 ரூபாய், ஆன்லைன் புக்கிங்கிற்கு 30 ரூபாய்னு ஒரு 3டி -ஐமேக்ஸ் படம் பார்க்க 520 ரூபாய் வரைக்கும் எப்படியும் ஆகிரும். அவ்வளவு ரூபாய் கொடுத்து படம் பார்க்குறதுல என்ன ஸ்பெஷல்? 

இந்த விலைக்கு முக்கிய காரணம் அவர்கள் வழங்கும் தரம் மற்றும் அவர்களுக்கு என அவர்கள் உருவாக்கியுள்ள நற்பெயர். மிகப்பெரிய திரை, துல்லியமான ஒலி என சினிமா பார்க்கும் உணர்வை மற்றோர் உயரத்துக்கு எடுத்து சென்றது ஐமேக்ஸின் சிறப்பு. திரையரங்கில் எங்கு உட்கார்ந்தாலும் ஒலி ஒரே மாதிரி துல்லியமாக இருப்பதற்கு ஐமேக்ஸின் லேசர் தொழில்நுட்பம் உத்தரவாதம் தருகிறது

ஒலிக்கே இப்படி என்றால் திரைஒளிக்கு ஐமேக்ஸில் பிரத்யேக கேமராக்கள் வைத்திருக்கிறார்கள். இவற்றை வாடகைக்கு மட்டுமே கொடுக்கிறார்கள். அதன் வாடகையும் டிக்கெட்டை போன்றே அதிகம் தான். எனவே ஹாலிவுட் மக்கள் படத்தின் முக்கிய காட்சிகளை மட்டுமே இந்த கேமராவில் எடுப்பதுண்டு. விலையில் மட்டும் இல்லை அளவிலும் ஐமேக்ஸ் கேமராக்கள் மிகவும் பெரிதாகவும், கனமாகவும் இருப்பதால் இதை இயக்குவதும் கடினம். ஆனால் அளவின் பயன் படம் பார்க்கும்போது புரியும். 

இந்தப் பிரத்யேக கேமராக்களில் எடுக்கப்பட்ட படங்கள் மட்டும்தான் ஐமேக்ஸ் திரையரங்குகளில் ஒடுகிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சாதாரணமாக எடுக்கப்பட்ட படங்கள் கூட  ரி-மாஸ்டரிங் முறையின் மூலம் ஐமேக்ஸ் ஃபார்மட்க்கு மாற்ற முடியும். பாகுபலி 2 அப்படிதான் ஐமேக்ஸில் ரிலீஸ் ஆனது. என்ன இருந்தாலும் தரத்தில் ஐமேக்ஸ் கேமராக்களில் எடுக்கப்பட்ட படங்களின் அருகில்கூட வரமுடியாது. எனவே டிக்கெட் விலையை கருத்தில் கொண்டு ஐமேக்ஸ் கேமராக்களில் எடுக்கப்பட்ட படங்களை மட்டும் ஐமேக்ஸ் திரையரங்குகளில் பார்ப்பதே கெட்டிக்காரத்தனம். 

அப்படி கொடுத்த காசுக்கு நியாயம் வேண்டுமானால் பிரபல ஹாலிவுட் இயக்குனரான கிறிஸ்டோபர் நோலனின் படங்களை கண்டிப்பாக ஐமேக்ஸில் பார்க்கலாம். ஏனென்றால் ஐமேக்ஸின் மீது தீராத காதல் நோலனிற்கு எப்போதும் உண்டு. தி டார்க் நைட் படத்தின் சில காட்சிகளை ஐமேக்ஸில் எடுத்ததில் அரம்பித்து இன்று கிட்டத்தட்ட முழு 'டன்கிர்க்' திரைப்படத்தையும் ஐமேக்ஸில் எடுக்கும் அளவிற்கு ஈர்க்கப்பட்டுள்ளார் நோலன். இதுவரை வெளியாகியுள்ள எந்த படத்தையும்விட 'டன்கிர்க்' திரைப்படம் அதிகமான காட்சி நேரத்தை கொண்டிருக்கலாம். அதாவது மொத்த 107 நிமிடங்களில் கிட்டதட்ட 100 நிமிடங்கள் ஐமேக்ஸ் கேமராக்களில் எடுக்கப்பட்டது. ஐமேக்ஸ் திரையரங்கில் பார்க்க இதைவிட சிறந்த படம் இருக்கமுடியாது என்றே கூறலாம். 

ஐமேக்ஸிலேயே பல ஃபார்மட்கள் உள்ளன. முதல் ஃபார்மட் ஐமேக்ஸ் ஃபிலிம் 70mm. இதுதான் ‘டன்கிர்க்' திரைப்படம் எடுக்கப்பட்ட ஒரிஜினல் ஃபார்மட். இது  கிட்டத்தட்ட 18k ரெசல்யூஷன். சாதாரணமான டிஜிட்டல் தியேட்டர்களில் அதிகபட்சம் 4k தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்தது ஐமேக்ஸ் 35mm ஃபிலிம், இது ஃபிலிம் அகலத்தில் 70mm ஃபார்மட்டை விட சிறியது. இது கிட்டத்தட்ட 12-13K  ரெசல்யூஷன் உடையது. இவை இரண்டும் ஐமேக்ஸ் ஃபிலிம் ஃபார்மட்கள். எனவே ஒரு பிரிண்ட்டின் தயாரிப்பு விலையே அதிகமாக இருக்கும். ஃபிலிம்மில் எதோ மாஜிக் இருப்பதாக கிறிஸ்டோபர் நோலன் நம்புகிறார்.

ஆனால் ஐமேக்ஸில் டிஜிட்டல் ஃபார்மட்களும் உண்டு. அதில் முதல் ஒன்று ஐமேக்ஸ் லேசர். இது 4k ரெசல்யூஷன்  உடையது. அடுத்தது ஐமேக்ஸ் ஸேனான், இது 2k ரெசல்யூஷன் உடையது. இரண்டுமே டூயல் ப்ரொஜெக்ஷன் உடையவை. ஐமேக்ஸ் டிஜிட்டலால் ஐமேக்ஸ் ஃபிலிம்  70mm பக்கத்தில்கூட நிற்க முடியாது.

சென்னை

சென்னை மக்களே, உடனே ஐமேக்ஸ் ஃபிலிம் 70mm 18k ரேசல்யூஷனா என்று அசந்துபோகவேண்டாம். நம்மூரில் இருப்பது கடைசியாக குறிப்பிடப்பட்ட ஐமேக்ஸ் ஸேனான் ஃபார்மட் தியேட்டர்தான். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close