அதிக பேட்டரித்திறன்... மீடியம் பட்ஜெட்... இன்டெக்ஸ் நிறுவனத்தின் மொபைல் போன்!

மொபைல் போன்களுடன் சார்ஜரையும், டேட்டா கேபிளையும் எந்நேரமும் சுமந்துகொண்டிருந்த காலம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கிறது. அதிக பேட்டரித்திறன்கொண்ட ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து அறிமுகமாகிவருகின்றன.

Intex Aqua Power IV மொபைல்

இந்திய நிறுவனமான இன்டெக்ஸ், அதிக பேட்டரித்திறன், 4ஜி வசதிகொண்ட மீடியம் பட்ஜெட் மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அக்குவா பவர் IV (Aqua Power IV) என்ற இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வெர்ஷனான நெளகட் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 4ஜி, 1 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி, 1.3 GHz குவாட்-கோர் புராஸசர், QR ஸ்கேனர், 5 இன்ச் டிஸ்ப்ளே, இரு பக்கமும் 5 மெகா பிக்ஸல் கேமரா என இதன் ஸ்பெக்ஸ் நிறைவாகவே இருக்கின்றன. 128 ஜிபி வரை இதன் மெமரியை நீட்டித்துக்கொள்ளலாம்.

4000 mAh திறன்கொண்ட பேட்டரி உள்ள இந்த மொபைல், கோல்டு மற்றும் கறுப்பு நிறங்களில் கிடைக்கிறது. ரூ.5,499 ஆக இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!