கோடிக்கணக்கில் கல்லா கட்டிய ரான்சம்வேர் - கூகுள் தகவல்! | Ransomware Victims paid Large sum of Money in 2 years

வெளியிடப்பட்ட நேரம்: 03:51 (27/07/2017)

கடைசி தொடர்பு:09:49 (27/07/2017)

கோடிக்கணக்கில் கல்லா கட்டிய ரான்சம்வேர் - கூகுள் தகவல்!

கணினி மென்பொருள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலையைச் செய்யக்கூடியவை. ஆனால், கணினியைத் தாக்கி தீங்கு விளைவிக்கும் மென்பொருள் மால்வேர் (Malware) என்று அழைக்கப்படுகிறது. இதில் இருக்கும் பல வகைகளில் ஒன்றுதான் 'ரான்சம்வேர்'.

ரான்சம்வேர்

சமீபத்தில் நடந்த 'வான்னாக்ரை' என்ற ரான்சம்வேர் தாக்குதல்தான், மிக மோசமான சைபர் அட்டாக்காகக் கருதப்படுகிறது. இந்நிலையில், ரான்சம்வேர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், கடந்த இரண்டு வருடங்களில் ரூபாய் 160 கோடி அளவுக்குப் பணம் செலுத்தியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

34 வகையான ரான்சம்வேர் மென்பொருள் வகைகளை ஆய்வுசெய்து, கூகுள் நிறுவனம் இந்தத் தகவலை அறிவித்துள்ளது. பயனாளர்களின் கணினியில் உள்ள தகவல்களை லாக் செய்துவிட்டு, அதைத் திரும்ப அக்சஸ் செய்ய குறிப்பிட்ட தொகையை இந்த நிறுவனங்கள் பிட்காயின்கள் மூலம் வசூலிக்கும். இதில், Cerber என்ற ரான்சம்வேர் சுமார் ரூ.44 கோடியும், CryptXXX என்ற ரான்சம்வேர் சுமார் ரூ.12 கோடியும் பணம் வசூலித்துள்ளன. ரான்சம்வேரைப் பரப்புவர்கள், பிட்காயின் மூலமாக பணத்தைப் பெறுவதால், அவர்களை எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க