அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளும் இந்தியா! காரணம் இதுதான்

ரிலையன்ஸ் ஜியோவின் வருகை, இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 4ஜி டேட்டாவில் ஜியோ அதிரடி ஆஃபர்களை வழங்க, ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்களும் 4ஜி டேட்டாவில் ஆஃபர்களை அள்ளி வழங்கின. இதனால், 4ஜி போன்களை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை, இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

4G பயன்பாடு


இந்நிலையில், உலகில் 4ஜி போனை அதிகம் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கையில், அடுத்த ஆண்டு அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா இரண்டாவது இடத்துக்கு முன்னேறும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கவுன்டர் பாய்ன்ட் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. தற்போது, 4ஜி  பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையில், சீனா, அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் தற்போது, 150 மில்லியன் 4ஜி பயன்பாட்டாளர்கள் இருக்கின்றனர். இது அடுத்த ஆண்டு 340 மில்லியனாக அதிகரிக்கும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் தற்போது 225 மில்லியன் 4ஜி பயன்பாட்டாளர்கள் உள்ள அமெரிக்காவில் அடுத்த ஆண்டு, 245 மில்லியன் 4ஜி பயன்பாட்டாளர்கள் இருப்பார்கள் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.  மேலும், தற்போது 740 மில்லியன் 4ஜி பயன்பாட்டாளர்கள் உள்ள சீனாவில், அடுத்த ஆண்டு 780 மில்லியன் 4ஜி டேட்டா பயன்பாட்டாளர்கள் இருப்பார்கள் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!