தமிழிலும் கூகுள் வாய்ஸ் சர்ச்!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மேலும் 8 இந்திய மொழிகளில் குரல் தேடல் சேவையை கூகுள் நிறுவனம் விரிவாக்கியுள்ளது. 


உலகின் மிகப்பெரிய பயனாளர் பேஸ் கொண்ட கூகுள் நிறுவனம், தேடு பொறி சேவையிலும் முன்னணியில் இருக்கிறது. இணையதளத்தில் டெக்ஸ்ட் வடிவிலும், குரல் வழியிலும் கூகுள் தேடுபொறி மூலம் எந்த ஒரு தகவலையும் தேட முடியும். தேடல் வசதியில் இந்திய மொழிகளைப் பொறுத்தவரை, இந்தி மொழியில் மட்டுமே கூகுள் சேவை இதுவரை இருந்து வந்தது. இந்தநிலையில், குரல் தேடல் சேவையை மேலும் 30 மொழிகளில் மேற்கொள்ளலாம் என்று கூகுள் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அவற்றில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி,  குஜராத்தி, மராத்தி மற்றும் உருது ஆகிய 8 மொழிகளும் அடங்கும். அறிவிப்புக்கு முன்னரே இந்த சேவை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்களை சென்றடைந்துவிட்டது. விரைவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ்-சில் இயங்கும் ஸ்மார்ட்போன்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. எழுத்துகள் மூலம் தேடுதலை விட குரல்வழி தேடல் மூன்று மடங்கு வேகமானது என்று கூறியுள்ள கூகுள், உலக அளவில் தேடுபொறியில் 20 சதவிகிதம் அளவுக்கு குரல்வழியே தேடப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!