Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

4 ஜிபி ரேம் கொண்ட ஆண்ட்ராய்டு மொபைல்கள்... எதை வாங்கலாம்? #BuyingGuide

மொபைல் ஆண்ட்ராய்டு

“லேண்ட்லைன்னா ரிங் ஆகுறதும், ஆண்ட்ராய்டுன்னா ஹேங் ஆகுறதும் சகஜம்தானே” என்பது நெட்மொழி. ஸ்மார்ட்போன்கள் எந்தவித தாமதமின்றி இயங்குவதற்கு, ஆரம்பகாலங்களில் குறைந்த அளவு ரேம் போதுமானதாக இருந்தது. அப்பொழுது பயன்படுத்தப்பட்ட இயங்குதளங்களின் மெமரி அளவு குறைவு என்பதால் 512MB ரேம் இருந்தாலே போதும் என்ற நிலை. ஆனால், இன்றைக்கு 2 ஜிபி ரேம் இருந்தால் கூட அதில் பாதிதான் பயன்படுத்த கிடைக்கிறது. மீதியை ஆப்ரேட்டிங் சிஸ்டமே எடுத்துக்கொள்கிறது.

இப்போது அதிகபட்சமாக 8 ஜி.பி ரேம் அளவு கொண்ட ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால், அவை ரொம்பவே விலை அதிகமாக இருக்கும். ஸ்மார்ட்போன்கள் ஹேங் ஆகாமல் இயங்குவதற்கு 3 ஜிபி க்கும் அதிக அளவுள்ள ரேம் தேவைப்படலாம்.  3 ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களின் விலையில் அவ்வளவு வித்தியாசம் இல்லாத காரணத்தால் 4 ஜிபி ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனம்.  4 ஜிபி ரேம் கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன்கள் எவை என்று பார்க்கலாம்.

YU Yureka Black

மொபைல்

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான YU வின் தயாரிப்பான YU Yureka Black சில மாதங்களுக்கு முன்னால் தான் வெளியானது. குறைந்த விலையில் சிறந்த 4 ஜிபி ரேம் என்பவர்களுக்கான சரியானத் தேர்வு இது. மெட்டல் வடிவமைப்பு, 2.5D திரை, முன்புற கைரேகை சென்சார் என வடிவமைப்பிலும் வசதியிலும் அசத்துகிறது யுரேகா பிளாக்.

5 இன்ச் 1080×1920 பிக்சல் திரை வசதி, 13 மெகாபிக்சல் கேமரா, 3000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 430 ஆக்டா கோர் பிராஸசர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்டது.
விலை Rs.8999

Redmi Note 4

மொபைல்

அறிமுகமே தேவையில்லை என்ற அளவிற்கு மிகப்பிரபலமான ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 4. மீடியம் பட்ஜெட் விலையில் அதிக வசதிகளுடன் விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது.

5.5  இன்ச் 1080×1920 திரை, 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்புற கேமரா, ஸ்னாப்டிராகன் 625 ஆக்டா கோர் பிராஸசர் ஆகியவற்றைக் கொண்ட இதன் 4100mAh பேட்டரி, இதன் மிகப்பெரிய பலம். தற்போது நொளகட் இயங்குதளத்திற்கு அப்டேட் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது. 

ஆனால் சில நேரங்களில் சூடாவது இதற்கு முந்தைய மாடல்களை காட்டிலும்  கேமரா தரம் சற்று  குறைவு போன்றவை இதன் குறைகள்.
4 ஜிபி ரேம் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட இதன் விலை 12,999

Lenovo k8 note

மொபைல்

மீடியம் விலை கொண்ட ஸ்மார்ட்போன்களில் ரெட்மி நோட் 4 க்கு போட்டியாக களமிறங்கியிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் லெனொவோ கே8 நோட். முந்தைய  மாடல்களில் இருந்த அடிக்கடி சூடாகும் பிரச்னையை லெனோவா சரி செய்திருக்குக்கும் வாய்ப்பு இதில் அதிகம். டர்போ சார்ஜிங் வசதி இருப்பதால் வேகமான சார்ஜிங் சாத்தியம்.

13+5 மெகா பிக்சல் ட்யூவல் கேமரா வசதியால் இதே விலையில் இருக்கும் மற்ற ஸ்மார்ட்போன்களை விட ஒரு படி முன்னால் நிற்கிறது இந்த கில்லர் நோட்.

13 மெகாபிக்ஸல் முன்புற கேமரா பிளாஷ் வசதியுடன், Dolby Atmos, 4000mAh பேட்டரி என சரியான விலையில் அதிக வசதிகளை கொண்டிருக்கிறது. 

3 ஜிபி ரேம் 32 ஜிபி இன்டர்னல் மெமரி விலை 12,999,
4 ஜிபி ரேம் 64 ஜிபி இன்டர்னல் மெமரி விலை 13999 

Moto G5 plus

மொபைல்


ஒரு முறை மோட்டரோலா ஸ்மார்ட்போன்களை உபயோகித்தவர்கள் அடுத்து வேறு எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களையும் வாங்குவதற்கு யோசிப்பதுண்டு.

மோட்டோரோலாவின் கட்டுமான தரமும் பயன்படுத்த எளிதான ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவமும் அதன் முக்கியமான சிறப்பம்சங்கள். ஆனால் மோட்டோரோலா தற்போது மீடியாடெக் ப்ராசாஸர்களைப் பயன்படுத்துவது பலருக்கும் பிடிக்கவில்லை ஆனால், இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ரகன் 625 ஆக்டா கோர் ப்ராசாஸர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 5.2 இன்ச் திரையுடன் தோற்றத்தில் பெரிதாகவும் இல்லாமல் சிறியதாகவும் இல்லாமல் கைகளில் அடக்கமாக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

12 மெகா பிக்சல் பின்புறம் மற்றும் 5 மெகாபிக்சல் முன்புற கேமரா, கைரேகை சென்சார், 3000 mAh பேட்டரி வசதியும் உண்டு. 
32 ஜிபி இன்டர்னல் மெமரி 4 ஜிபி விலை 15999


Samsung Galaxy On Max

அதிகமாக கேம்ஸ் விளையாடுபவர்களுக்கும், வீடியோக்கள் பெரிய  திரையில் பார்ப்பதை விரும்புபவர்களுக்கும் இந்த ஸ்மார்ட்போன் சிறந்தத் தேர்வாக இருக்கும். சாம்சங் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக குறிப்பிடுவது இதன் கேமராவைத்தான் 13 மெகாபிக்சல் f/1.7 பின்புற கேமரா  மூலமாக இரவு நேரங்களிலும் சிறந்த புகைப்படங்களை எடுக்க முடியும் 13 மெகாபிக்சல் முன்புற கேமராவும் பிளாஷ் வசதியைக் கொண்டிருக்கிறது.

5.7 இன்ச் full HD டிஸ்பிளே,

ஒரே நேரத்தில் சிம் கார்டு மற்றும் மெமரி கார்டு உபயோகிக்கும் வசதி, முன்புற கைரேகை சென்சார், 3300 mAh பேட்டரி திறன் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள்.

4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட இதன் விலை 16,900

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement