Published:Updated:

`மாஸ்' டிஸ்ப்ளே, `தூள்' பர்ஃபாமன்ஸ்... 50K விலைக்கு ஓகேவா ஒன்ப்ளஸ் 7 ப்ரோ? #InDepthReview #OnePlus7Pro

ம.காசி விஸ்வநாதன்

HDR 10+ சப்போர்ட்டுடன் வண்ணங்கள் தெறிக்கும் `ஆளப்போறான் தமிழன்' முதல் வெறும் டார்ச்லைட் ஒளியில் கடக்கும் `பீட்சா' வரை அனைத்திலும் வெளுத்துவாங்குகிறது டிஸ்ப்ளே.

`மாஸ்' டிஸ்ப்ளே, `தூள்' பர்ஃபாமன்ஸ்... 50K விலைக்கு ஓகேவா ஒன்ப்ளஸ் 7 ப்ரோ? #InDepthReview #OnePlus7Pro
`மாஸ்' டிஸ்ப்ளே, `தூள்' பர்ஃபாமன்ஸ்... 50K விலைக்கு ஓகேவா ஒன்ப்ளஸ் 7 ப்ரோ? #InDepthReview #OnePlus7Pro

ன்ப்ளஸின் 7 சீரிஸ் போன்கள் வந்துவிட்டன. அதில் அதிகம் கவனம் ஈர்த்தது ஒன்ப்ளஸ் 7 ப்ரோதான். ஒன்ப்ளஸ் திட்டமிட்டதும் அதைத்தான். மொத்த வெளிச்சத்தையும் 7 ப்ரோவின் மீது விழ வைக்கவேண்டும் என்ற முனைப்பு நன்றாகவே வெளிப்பட்டது. ஒன்ப்ளஸ் 7, 6T-யின் உள்ளே சிறிய பட்டி டிங்கரிங் செய்யப்பட்டதுதான் என்பதால் அதைப் பெருமளவில் ஒன்ப்ளஸே கண்டுகொள்ளவில்லை. ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் உச்சபட்ச பிரீமியம் ஃபிளாக்ஷிப் போன்களுக்குச் சற்றும் சளைத்ததல்ல என ஒன்ப்ளஸ் நம்பும் இந்த போன் எப்படி இருக்கிறது? சுமார் ஒரு வாரப் பயன்பாட்டுக்குப்பின் என் அனுபவத்தை இங்கு பதிவிடுகிறேன்.

`மாஸ்' டிஸ்ப்ளே, `தூள்' பர்ஃபாமன்ஸ்... 50K விலைக்கு ஓகேவா ஒன்ப்ளஸ் 7 ப்ரோ? #InDepthReview #OnePlus7Pro

டிஸ்ப்ளே

ஒன்ப்ளஸ் 7 ப்ரோவை கையில் எடுத்ததும் நம் கண்ணில்படுவது இதன் பெரிய டிஸ்ப்ளேதான். நாட்ச், ஹோல் என எதுவும் இல்லாமல் மேலிருந்து கீழ்வரை முழுவதும் டிஸ்ப்ளேதான். சாம்சங்கின் போன்களில் இருப்பதைப் போன்ற curved டிஸ்ப்ளே இது. ஆன் செய்து பயன்படுத்திய சில நிமிடங்களிலேயே மற்ற ஸ்கிரீன்களுக்கும் இந்த ஸ்கிரீனிற்கும் ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கிறது என்பதை உணரமுடிகிறது. அது என்னவென்று பார்த்தால் இது 90Hz டிஸ்ப்ளே. அதாவது விநாடிக்கு 90 முறை refresh ஆகும் இந்த ஸ்கிரீன், இதனால் ஆப் விட்டு இன்னொரு ஆப்பிற்கு, மாறுவது போன்ற சிறிய விஷயங்களில்கூட இதை உணரமுடிகிறது. இதனாலேயே ஹை-எண்டு கேம்கள் விளையாட சிறந்த ஸ்கிரீனாகிறது இது. 

`மாஸ்' டிஸ்ப்ளே, `தூள்' பர்ஃபாமன்ஸ்... 50K விலைக்கு ஓகேவா ஒன்ப்ளஸ் 7 ப்ரோ? #InDepthReview #OnePlus7Pro

`நான் பெருசா கேம் ஆட மாட்டேன்' என இருப்பவர்களுக்கும் படம், சீரிஸ் பார்க்க சிறந்த ஸ்கிரீன் இதுதான். HDR 10+ சப்போர்ட்டுடன் வண்ணங்கள் தெறிக்கும் `ஆளப்போறான் தமிழன்' முதல் வெறும் டார்ச்லைட் ஒளியில் கடக்கும் `பீட்சா' வரை அனைத்திலும் வெளுத்துவாங்குகிறது டிஸ்ப்ளே. இங்கெல்லாம் தானாகவே 90Hz, 30Hz அளவில் குறைந்துவிடுகிறது. பெரும்பாலும் படங்களும், சீரிஸ்களும் நொடிக்கு 30 ஃப்ரேம்களைக் கடந்து படமாக்கப்படுவதில்லை. இதனால் 90Hz இங்குத் தேவைப்படாது. இதனால் பேட்டரி சேமிக்கப்படுகிறது. மொத்தத்தில் பார்த்தால் டிஸ்ப்ளேதான் ஒன்ப்ளஸ் 7 ப்ரோவின் USP.

ஆடியோ

இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் டால்பி அட்மாஸ் சப்போர்ட்டுடன் வருகின்றன. நல்ல டிஸ்ப்ளே வேறு இருப்பதால் அமைதியான ஓர் அறை மட்டும் கிடைத்தால் இதுவே குட்டி திரையரங்குபோல் ஆகிவிடுகிறது. 6T போல இதிலும் 3.5mm ஹெட்போன் ஜாக் கிடையாது. இம்முறை அதற்கான அடாப்டரும் கொடுக்கப்படவில்லை. எனவே இப்போது நல்ல இயர்போன்கள் வைத்திருந்தால் பாடல்கள் கேட்க இந்த அடாப்டரையும் வாங்கவேண்டும். 

கேமரா

இந்த அசத்தல் டிஸ்ப்ளே ஓகே, செல்ஃபி கேமரா எங்கே என கேமரா சென்று பார்த்தால் பாப்-அப் கேமரா செட்டப்பில் ஆமையின் தலையைப்போல் வெளியே வருகிறது 16 MP செல்ஃபி கேமரா. மோட்டார்கள் கொண்டு இயங்கும் இது சோதனைகளில் குறைந்தபட்சம் 3,00,000 தடவைகளாவது பிரச்னைகளின்றி வெளிவருகிறது என்கிறது ஒன்ப்ளஸ். இந்த கேமராவை மட்டும் பார்த்து பயந்து போனை வாங்காமல் சென்றுவிடக் கூடாதென கான்கிரீட் தரைகளிலெல்லாம் கூட இந்த கேமராவைத் தூக்கிப்போட்டு அதை வீடியோ எடுத்து `நம்புங்க பாஸ்' என்கிறது ஒன்ப்ளஸ். ஆமையைப் போல வெளியே வருவது மட்டுமன்றி ஆபத்தென்றால் அதைப்போன்றே உடனே ஓட்டுக்குள் சென்றுவிடுகிறது. அதாவது கைதவறி கீழே விழுக நேர்ந்தால் உடனடியாக செல்ஃபி கேமரா உள்ளே சென்றுவிடும். என் பயன்பாட்டில் இதுவரை இந்த கேமரா குறித்த எந்தப் பிரச்னையும் இல்லை. ஆட்டோமேட்டிக்காக உள்ளே செல்லும் பாப் அப் கேமராவை, நாம் மேனுவலாக உள்ளே தள்ளினால் வார்னிங் காட்டுகிறது ஒன் பிளஸ். அதையும் தாண்டி பாப் அப் கேமராவை கரடு முரடாகப் பயன்படுத்தலாமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.  கேமரா தரத்தில் நல்ல மார்க்கையே வாங்குகிறது செல்ஃபி கேமரா.

`மாஸ்' டிஸ்ப்ளே, `தூள்' பர்ஃபாமன்ஸ்... 50K விலைக்கு ஓகேவா ஒன்ப்ளஸ் 7 ப்ரோ? #InDepthReview #OnePlus7Pro

பின்புறத்தில் ஒன்றுக்கு மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 48 MP மெயின் கேமரா, 16 MP Wide Angle கேமரா, 8 MP telephoto கேமரா. வெரைட்டி எதிர்பார்ப்பவர்களை நிச்சயம் திருப்திப்படுத்தும் இந்த கேமராக்கள். நான் சொல்வதைவிட படங்களைப் பார்த்தால் இந்த மூன்று கேமராக்கள் எதற்கு என்பது உங்களுக்கே புரிந்துவிடும். 

`மாஸ்' டிஸ்ப்ளே, `தூள்' பர்ஃபாமன்ஸ்... 50K விலைக்கு ஓகேவா ஒன்ப்ளஸ் 7 ப்ரோ? #InDepthReview #OnePlus7Pro

ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் கட்டாயம் இருக்கவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கும் Portrait, Nightscape போன்ற வசதிகளும் இருக்கின்றன. கூகுள் பிக்ஸல் போன்களில் இருக்கும் Nightsight-உடன் ஒப்பிட்டுப் பார்த்தால் Nightscape ஓகே ரகம்தான். எப்போதும் கேமரா பிரிவில்தான் ஆப்பிள், கூகுள், சாம்சங் போன்ற நிறுவனங்களிடம் அடிவாங்கும் ஒன்ப்ளஸ். இதைத் திருத்த பெரும் முயற்சிகள் எடுத்திருந்தாலும் இம்முறையும் அதுதான் நிலைமை. இதற்கு ஒன்ப்ளஸ் கேமரா மென்பொருளுக்கும் பெரும் பங்கு உண்டு. அதுவே அழகுபடுத்திகாட்டுவதாகச் சிலநேரங்களில் உண்மையிலிருந்து புகைப்படங்களை விலகி நிற்கவைக்கிறது. இது சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் விலையைக் கணக்கில் கொண்டால் வேண்டாம் என்று சொல்லுமளவுக்கு இது பெரிய பிரச்னை இல்லை என்றே தோன்றுகிறது.

`மாஸ்' டிஸ்ப்ளே, `தூள்' பர்ஃபாமன்ஸ்... 50K விலைக்கு ஓகேவா ஒன்ப்ளஸ் 7 ப்ரோ? #InDepthReview #OnePlus7Pro

பர்ஃபாமன்ஸ்

இதில் எந்தக் குறையும் வைக்கவில்லை ஒன்ப்ளஸ். லேட்டஸ்ட் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 855 புராசஸருடன் 6 GB, 8 GB, 12 GB என மூன்று RAM வேரியன்ட்டுகளில் வருகிறது 7 ப்ரோ. இதனால் ஹைக்ராபிக்ஸ் கேம்ஸ் கூட மிகவும் ஸ்மூத்தாக இருக்கிறது. ஸ்கிரீனும் டிஸ்டிங்க்ஷன் பெறுவதால் இப்போதைக்கு கேம் விளையாடச் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான் எனக் கண்டிப்பாகச் சொல்லலாம் (சில கேமிங் போன்களைத் தவிர்த்து). சொல்லப்போனால் 12 GB RAM எல்லாம் வெகுசிலருக்கே தேவைப்படும். கொஞ்சம் கேம், கொஞ்சம் ஸ்ட்ரீமிங் என இருக்கும் அன்றாடப் பயன்பாட்டாளர்களுக்கு 6 GB அல்லது 8 GB வேரியன்ட்டுகளே போதுமானதாக இருக்கும். 

`மாஸ்' டிஸ்ப்ளே, `தூள்' பர்ஃபாமன்ஸ்... 50K விலைக்கு ஓகேவா ஒன்ப்ளஸ் 7 ப்ரோ? #InDepthReview #OnePlus7Pro

ஸ்டோரேஜ்

128 GB, 256 GB என இரண்டு ஸ்டோரேஜ் வேரியன்ட்டுகளில் வருகிறது 7 ப்ரோ. இதிலும் ஒரு ஸ்பெஷல் மேட்டர் இருக்கிறது. UFS 3.0 ஸ்டோரேஜுடன் வரும் முதல் போன் இதுதான். ஃபைல்களை கணினியிலிருந்து காப்பி செய்வது, போன் உள்ளேயே நடக்கும் ஃபைல் பரிமாற்றங்கள் என அனைத்துமே முந்தைய UFS 2.1-ஐ விட மிகவும் வேகமாக இருக்கிறது.

ஓ.எஸ்

ஆண்ட்ராய்டு பையின் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஆக்சிஜன் ஓ.எஸ்.ஸில் இம்முறை எக்ஸ்ட்ரா வசதிகள் வந்திருக்கின்றன. ஸ்கிரீன் ரெக்கார்டர் ஓ.எஸ்.ஸிலேயே வருகிறது. மேலும் சிறப்பு கேமிங் மோடு, RAM boost, ஜென் மோடு எனப் பல வசதிகள் இருக்கின்றன. இதில் ஜென் மோடு ஸ்பெஷல். போனின் தொந்தரவின்றி அமைதியாக இருக்கவேண்டும் என நினைத்தால் இதை ஆன் செய்துகொள்ளலாம். 20 நிமிடங்களுக்கு உங்களால் போனில் அவசர அழைப்புகள், கேமரா தவிர எதையும் செய்யமுடியாது. இதில் லுக் அண்ட் ஃபீல்லை உங்களுக்கு ஏற்றதுபோல செட்டிங்ஸிலேயே எளிதாக மாற்றமுடிகிறது.  

`மாஸ்' டிஸ்ப்ளே, `தூள்' பர்ஃபாமன்ஸ்... 50K விலைக்கு ஓகேவா ஒன்ப்ளஸ் 7 ப்ரோ? #InDepthReview #OnePlus7Pro

சார்ஜிங் 

4000 mAh பேட்டரி போதுமானதாகத் தெரிந்தாலும், 90Hz டிஸ்ப்ளே சற்றே சார்ஜ் இழுக்கும் என்பதால் வேற லெவல் பேட்டரி என்று சொல்லமுடியாது. அதற்காக டிஸ்ப்ளேவை 60Hz-க்கு செட்டிங்ஸை மாற்றினால் இந்த போனின் சிறப்பை மிஸ் செய்துவிடுவீர்கள். 30W வார்ப் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளதால் சற்றே வேகமாக சார்ஜ் ஆகிவிடுகிறது. 0-50%-க்கு 30 நிமிடங்களுக்குள் சார்ஜ் ஆகிவிடுகிறது.

`மாஸ்' டிஸ்ப்ளே, `தூள்' பர்ஃபாமன்ஸ்... 50K விலைக்கு ஓகேவா ஒன்ப்ளஸ் 7 ப்ரோ? #InDepthReview #OnePlus7Pro

ஃபிங்கர்ப்ரின்ட் சென்ஸார்

6T-யின் அதே இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்ப்ரின்ட் சென்ஸார்தான். இம்முறை சுற்றளவு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. 6T-யை விட வேகமாக அன்லாக் ஆகிறது. பாப்-அப் கேமரா என்பதால் ஃபேஸ் அன்லாக் பயன்படுத்துவதை தவிர்க்கலாம் என்பதே என் அட்வைஸ். இதற்காக அடிக்கடி கேமரா வந்துசெல்ல வேண்டாமே.  

`மாஸ்' டிஸ்ப்ளே, `தூள்' பர்ஃபாமன்ஸ்... 50K விலைக்கு ஓகேவா ஒன்ப்ளஸ் 7 ப்ரோ? #InDepthReview #OnePlus7Pro

வடிவமைப்பு

எல்லோரும் முதலில் இதைப்பற்றிதான் பேசுவார்கள். ஒரு மாற்றத்திற்காக இதைக் கடைசியில் பார்ப்போம். க்ளாஸ் ஃபினிஷுடன் பின்புறம் பார்க்க மிகவும் அழகாகவும் பிரீமியமாகவும் இருக்கிறது. விற்பனைக்கு வரும் மூன்று  நிறங்களில் நெபுலா ப்ளூதான் நம்ம சாய்ஸ். ஆனால் சற்றே பெரிய நீளமான போன்தான். எதற்கும் உங்களுக்கு செட் ஆகுமா என யோசித்துவாங்குவது நல்லது. எடையும் இந்த செக்மென்ட் போன்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் சற்றே அதிகம்தான் (206 கிராம்). 

`மாஸ்' டிஸ்ப்ளே, `தூள்' பர்ஃபாமன்ஸ்... 50K விலைக்கு ஓகேவா ஒன்ப்ளஸ் 7 ப்ரோ? #InDepthReview #OnePlus7Pro

ப்ளஸ் 

  • பெரிய edge to edge டிஸ்ப்ளே
  • பர்ஃபாமன்ஸ்
  • ஆக்சிஜன் ஓ.எஸ்
  • 50,000 அதிக விலை போலத்தெரிந்தாலும் இந்த ஸ்பெக்ஸ்க்குக் குறைவுதான்

மைனஸ்

  • மற்ற பிளாக்ஷிப் போன்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் சற்றே ஓகேவான கேமரா

கருத்து இல்லை

  • இப்போது ஓகே என்றாலும் பாப்-அப் கேமரா ஐடியா பற்றி சில மாதங்களுக்குப் பிறகுதான் கூறமுடியும்

மொத்தமாக 50,000-த்திற்கு worth-தா என்று கேட்டால் ஆம் என்றே சொல்லத்தோன்றுகிறது. இதே வசதிகளுடன் நல்ல போன் வேண்டுமென்றால் மற்ற பெரிய நிறுவனங்களில் குறைந்தபட்சம் 75 ஆயிரமாவது தேவைப்படும். எந்த விதத்திலும் அந்த போன்களுக்கு சளைத்ததல்ல 7 ப்ரோ. சொல்லப்போனால் பல ஏரியாக்களில் அந்த போன்களை நொறுக்குகிறது இது. எனவே உங்களிடம் பட்ஜெட் இருக்குமென்றால் 7 ப்ரோ நல்ல பர்ச்சேஸ்தான்.

Vikatan