Published:Updated:

உலகின் அதிவேக ஸ்மார்ட்போன்..... ஒன்பிளஸ்ஸை முந்திய ரெட்மியின் ஸ்கோர்!

மு.ராஜேஷ்

பிரீமியம் செக்மென்ட்டில் பெரிய அளவு வரவேற்பைப் பெற்றிருக்கும் ஒன்பிளஸ் 7 புரோ ஸ்மார்ட்போனுக்குப் போட்டியாக புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது ஷியோமி நிறுவனம். ஏற்கெனவே சீனாவில் வெளியாகிவிட்ட ரெட்மி K20 என்ற போன் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான விளம்பரத்தை இப்போதே தொடங்கியிருக்கிறது ஷியோமி நிறுவனம். நேற்று முன்தினம் ரெட்மி K20-தான் உலகின் அதிவேக ஸ்மார்ட்போன் என்று ட்வீட் செய்திருந்தார் ஷியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனு குமார்.

AnTuTu எனப்படும் பெஞ்ச்மார்க்கில் 388,803 புள்ளிகளை ஸ்கோர் செய்திருக்கிறது. இதற்கு முன்பு 373,953 புள்ளிகளை ஸ்கோர் செய்து ஒன்பிளஸ் 7 புரோ ஸ்மார்ட்போனே முதலிடத்தில் இருந்தது. அதன் காரணமாக அதை அறிமுகப்படுத்தும்போது அதுதான் உலகின் அதிவேக ஸ்மார்ட்போன் என அதை விளம்பரப்படுத்தியது ஒன் பிளஸ் நிறுவனம். அதற்குப் பதிலடியாகத்தான் இப்போது இந்த விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறது ஷியோமி. ஒன்பிளஸ் 7 புரோ ஸ்மார்ட்போனில் இருக்கும் அதே Snapdragon 855 புராஸசரே ரெட்மி K20 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Vikatan