Published:Updated:

சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் சோனியா காந்திக்கு 6-வது இடம்!

சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் சோனியா காந்திக்கு 6-வது இடம்!
சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் சோனியா காந்திக்கு 6-வது இடம்!
சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் சோனியா காந்திக்கு 6-வது இடம்!

நியூயார்க்: உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில், காங்கிரஸ் தலைவர் சோனியா  காந்தி 6-வது இடத்தில் உள்ளதாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் போர்ப்ஸ்  பத்திரிகை தெரிவித்துள்ளது.
 
இந்த ஆண்டுக்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்கள் கொண்ட பட்டியலை போர்ப்ஸ்  பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இதில் முதலிடத்தில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் இடம்பெற்றுள்ளார்.அவருக்கு  அடுத்தபடியாக ஹிலாரி கிளிண்டன் 2-வது இடத்தில் உள்ளார்.

அதே சமயம் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி 6-வது  இடத்தில் உள்ளார்.அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபர் இந்திரா நூயி 12-வது  இடத்தைப் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு சோனியா 7-வது இடத்தை பிடித்திருந்த நிலையில்,அமெரிக்க அதிபர்  ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா இந்த ஆண்டு 7-வது இடத்தைப்  பிடித்துள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

##~~##