Published:Updated:

அமெரிக்க நட்பை இழக்கத் தயாராகிறதா பாகிஸ்தான்?

அமெரிக்க நட்பை இழக்கத் தயாராகிறதா பாகிஸ்தான்?
அமெரிக்க நட்பை இழக்கத் தயாராகிறதா பாகிஸ்தான்?

அமெரிக்க நட்பை இழக்கத் தயாராகிறதா பாகிஸ்தான்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கருத்தால், அமெரிக்கா உடனான உறவைத் தற்காலிகமாகத் துண்டித்துக்கொள்ள பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

'தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகளை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த சில நாள்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்தார். தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் புதிய பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து ட்ரம்ப் பேசுகையில், ‘தீவிரவாத இயக்கங்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்காமல் அமைதியாக இருக்க முடியாது. ஆஃப்கானிஸ்தானில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றினால், பாகிஸ்தானுக்கு நன்மைகள் கிட்டும். ஆனால், தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்து வருவதால், அந்நாடு பெரிய இழப்புகளைச் சந்தித்துவருகிறது’ என்றார்.

'ஆஃப்கானிஸ்தான் விவகாரம் முற்றும்போதெல்லாம், தங்கள் நாட்டுக்கு எதிராக அமெரிக்கா கருத்து வெளியிட்டுவருகிறது' என்று கூறும் பாகிஸ்தான், அமெரிக்கா உடனான தொடர்பைத் தற்காலிமாக நிறுத்திக்கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடும் நேரங்களில் எல்லாம், இந்தியாவுக்கு ஆதரவாகவும் இந்தியாவின் உதவி தேவைப்படுவதாகவும் கூறிவருவது பாகிஸ்தானின் கோபத்தை மேலும் அதிகப்படுத்திவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு