Published:Updated:

'இந்திய ரசிகர்களைப் போல செயல்படாதீர்கள்': மீண்டும் சர்ச்சையில் இலங்கை முன்னாள் கேப்டன்!

'இந்திய ரசிகர்களைப் போல செயல்படாதீர்கள்': மீண்டும் சர்ச்சையில் இலங்கை முன்னாள் கேப்டன்!
'இந்திய ரசிகர்களைப் போல செயல்படாதீர்கள்': மீண்டும் சர்ச்சையில் இலங்கை முன்னாள் கேப்டன்!

'இந்திய ரசிகர்களைப் போல செயல்படாதீர்கள்': மீண்டும் சர்ச்சையில் இலங்கை முன்னாள் கேப்டன்!

இந்திய ரசிகர்கள் போன்று செயல்படாதீர்கள் என்று இலங்கை ரசிகர்களுக்கு அறிவுரை கூறி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா.


இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ளது. ஏற்கெனவே, டெஸ்ட் தொடரில் இலங்கையை வொய்ட் வாஷ் செய்த நிலையில், தற்போது ஒரு நாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இரண்டு போட்டிகள் மீதம் உள்ள நிலையில், ஒரு நாள் தொடரிலும் இந்திய அணி இலங்கையை வொய்ட் வாஷ் செய்யும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


இதனிடையே, கிரிக்கெட்டில் இலங்கை அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதால் அந்நாட்டு ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியின்போது, இந்திய அணி வெற்றி உறுதியான நிலையில், கடுப்பான இலங்கை ரசிகர்கள் மைதானத்துக்குள் இருந்த அந்நாட்டு வீரர்கள் மீது தண்ணீர் பாட்டில்களை வீசினர். இதனால், ஆட்டம் சற்று நேரத்துக்குப் பாதிக்கப்பட்டது.


இந்நிலையில், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா, "இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடக்கக் கூடாது. இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு, அணி தோற்கும்போது வருத்தம் ஏற்பவது இயல்புதான். நாம் இந்திய ரசிகர்களைப் போல செயல்பட வேண்டாம் என இலங்கை ரசிகர்களுக்குக் கோரிக்கை வைக்கிறேன். நமக்குச் சிறந்த வரலாறும், கலாசாரமும் உள்ளது. எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை ஏற்க முடியாது" என்றார்.

2011 உலகக் கோப்பையில் இந்திய அணி மேட்ச் ஃபிக்ஸிங் செய்தது என்று இவர் ஏற்கெனவே சர்ச்சையைக் கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு