Published:Updated:

நடுவானில் ஏவுகணை சோதனை: வடகொரியாவுக்கு அமெரிக்கா பதிலடி!

நடுவானில் ஏவுகணை சோதனை: வடகொரியாவுக்கு அமெரிக்கா பதிலடி!
நடுவானில் ஏவுகணை சோதனை: வடகொரியாவுக்கு அமெரிக்கா பதிலடி!

நடுவானில் ஏவுகணை சோதனை: வடகொரியாவுக்கு அமெரிக்கா பதிலடி!

வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா நேற்று நடுவானில் ஏவுகணைகளை எதிர்த்து அழிக்கக்கூடிய ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் தொடர் ஏவுகணைச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டுவருகிறது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் வட கொரியா ராணுவ அணிவகுப்பு நடத்தியது. அதில் புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. தொடர்ச்சியாக, சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களையும் சம்பாதித்து வருகிறது வட கொரியா.

சர்வதேச நாடுகள் மற்றும் ஐநா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவருகிறது வட கொரியா. அந்த நாட்டின் மீது, ஐநா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதை வட கொரியா பொருட்படுத்தவேயில்லை. இந்நிலையில், ஜப்பானைக் கடந்து பசிபிக் பெருங்கடலில் நேற்று ஏவுகணைச் சோதனை ஒன்றை வடகொரியா அரங்கேற்றியது. ’பசிபிக் பெருங்கடலில் நிகழ்த்தும் முதல் வெற்றிகர ஏவுகணைச் சோதனை. இதுபோல் பல தாக்குதல்கள் பின்னாளில் தொடரும்’ என்று வடகொரியா அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.

இந்நிலையில், வடகொரியாவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா நேற்று ஏவுகணைகளைத் தடுத்து நிறுத்தி அழிக்ககூடிய ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக சோதனை செய்தது. இதைத்தொடர்ந்து இன்று தென் கொரியாவுக்கு அமெரிக்காவின் முக்கிய ஏவுகணைகள் படை எடுத்துள்ளது. வடகொரியாவின் எதிரி நாடான தென் கொரியாவில் ஏவுகணைகளை நிலை நிறுத்துவதன் மூலம் வடகொரியாவுக்கு அமெரிக்கா வெளிப்படையாகவே சவால் விடுப்பதாகவே தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு