Published:Updated:

டயானா மரணத் தருவாய் நினைவுகள்! #PrincessDianaMemories

டயானா மரணத் தருவாய் நினைவுகள்! #PrincessDianaMemories
டயானா மரணத் தருவாய் நினைவுகள்! #PrincessDianaMemories

டயானா மரணத் தருவாய் நினைவுகள்! #PrincessDianaMemories

பிரிட்டன் சரித்திரத்தில், டயானா என்ற சகாப்தம் முடிந்து இன்றுடன் 21 வருடங்களாகின்றன. ஆனால், பிரிட்டன் நாட்டு மக்களின் தங்கள் இதயத்தில் இன்றும் அவரைக் கொண்டாடி வருகின்றனர். உதட்டோரம் ஒரு மெல்லிய புன்சிரிப்பு, அழுத்தமான பார்வை, அன்பான  உள்ளம், துணிச்சலான முடிவுகள் என தனது வாழ்க்கை முழுவதும் ஆஸம் ஆளுமையாக வாழ்ந்துமுடித்தவர் பிரிட்டன் இளவரசி டயானா.

டயானாவின் வாழ்க்கை, அரச குடும்ப சரித்திரத்திலேயே எவரும் காணாத திருப்பங்களைக் கொண்டது. அதுவரை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சாதாரண மக்களிடம் பழக முற்படாதபோது, எளிய மக்களிடம் பேசுவதும், நோயாளிகளுடன் கைக்குலுக்குவதும் 'மக்களின் இளவரசி’ என்ற பட்டத்தை அவருக்குப் பெற்றுத் தந்தது.

1962-ம் ஆண்டு பிறந்த டயானா, அவரது ஒன்பது வயதுவரை வீட்டிலேயே படித்தார். கூச்ச சுபாவம் கொண்ட டயானா, இசை, நடனம் ஆகியவற்றின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார். தன் பெற்றோரின் விவகாரத்துக்குப் பிறகு, ஸ்விட்சர்லாந்தில் தனது மேற்படிப்பை முடித்தார். குழந்தைகள் மீது எப்போதும் அன்பு காட்டிய டயானா, ஒரு ஆரம்பநிலைப் பள்ளியில் தனது திருமணம் வரை பணியாற்றிக்கொண்டிருந்தார். அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், சம்பளம் வாங்கி வேலை செய்தது அதுவே முதல் முறை!

டயானாவும் இளவரசர் சார்லஸூம் திருமணம் செய்துகொண்டபோது, பிரிட்டனில் அது ஒரு கோலாகலத் திருவிழாவாக நடந்தது. அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்ததும், அதன் பிறகு அவரது திருமண வாழ்க்கை  மிகப்பெரிய சோகத்தில் முடிந்ததும் உலகம் அறிந்த விஷயமே! 20 ஆண்டுகள் கழித்து, சென்ற வருடம், ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம், அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் பற்றி ஓர் ஆவணப்படம் வெளியிட்டுள்ளது. டயானா தனது வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளையும், அவை எவ்வாறு தன்னை பாதித்தன என்றும் தன் சொந்தக் குரலில் பேசியிருப்பதுதான் இந்த ஆவணப்படத்தின் சிறப்பம்சம். 

டயானா மற்றும் சார்லஸின்  திருமணம் வாழ்க்கை முறிந்துபோவதற்குக் காரணமாக இருந்தவர், சார்லஸின் முன்னாள் காதலியும் தற்போதைய மனைவியுமான காமில்லா. டயானா பேசியிருக்கும் அந்த ஆவணப்படத்தில் தனது திருமண வாழ்க்கை பற்றி கூறியிருக்கிறார். “என்னுடைய திருமணத்தன்றே என் கணவர் சார்லஸின் தந்தை அவரிடம், 'உனக்கு இந்தத் திருமணம் பிடிக்கவில்லை எனில், நீ ஐந்து வருடங்கள் கழித்து உனக்குப் பிடித்தவருடன்  இருக்கலாம்' என்று கூறினார். அதேபோல், கிட்டதட்ட ஐந்து வருடங்கள் கழித்து அவர் கமில்லாவுடன் பழக ஆரம்பித்தார்'' என்று கூறியிருக்கிறார்.

அவரது வாழ்க்கையைப் போலவே, அவரது மரணமும் பல சர்ச்சைகளை உருவாக்கியது. அவரின்  கார் விபத்து அரச குடும்பத்தின் சதி என்று கூறப்பட்டது. ஆனால், அவையெல்லாம் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை. “கடவுளே, என்ன நடந்தது?” - அவருக்கு முதலுதவி செய்தவர், டயானா  கூறிய கடைசி வார்த்தைகள் இவைதாம் என்று கூறுகிறார். 

தன் சொந்த வாழ்க்கை எப்படியிருந்தாலும், மக்களுக்கு சேவை செய்வதிலிருந்து டயானா விலகியதேயில்லை. அன்னை தெரசாவும் டயானாவும் நெருங்கிய தோழிகள். டயானா  இறந்த எட்டு நாள்கள் கழித்து, அன்னை தெரசாவும் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. “உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவது நம் வாழ்க்கையில் முக்கியப்பங்காக இருக்க வேண்டும். அது நம் இலக்கை அடையும் வழியாக இருக்க வேண்டும்” என்று கூறிய டயானா, அப்படித்தான் வாழ்ந்துமிருக்கிறார்.

மிஸ் யூ டயானா!

அடுத்த கட்டுரைக்கு