Published:Updated:

மது... மாடு... மக்கள்...! - ட்ரம்ப் கவனிக்காத அமெரிக்காவின் தமிழ்நாடு

மது... மாடு... மக்கள்...! - ட்ரம்ப் கவனிக்காத அமெரிக்காவின் தமிழ்நாடு
News
மது... மாடு... மக்கள்...! - ட்ரம்ப் கவனிக்காத அமெரிக்காவின் தமிழ்நாடு

மது... மாடு... மக்கள்...! - ட்ரம்ப் கவனிக்காத அமெரிக்காவின் தமிழ்நாடு

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள பழங்குடியின பகுதி ப்ளாக் ஃபீட். இங்குள்ள மக்கள் பத்தாயிரம் ஆண்டு பழமையான கலாசாரத்தைக் கொண்டவர்கள். இந்தப் பழங்குடி மக்களின் முக்கிய வாழ்வாதாரம் மாடுதான். மாட்டை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்துவரும் இந்த மக்களின் வாழ்க்கைமுறைக்கு எமனாய் வந்தது மது! இப்போது இந்த ஊரில் உள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் மதுவுக்கு அடிமை! இதன் தொடர்ச்சியாக குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது; குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இதைப் படித்துக்கொண்டிருக்கும் போது, 'நமக்கு அருகில் எங்கேயோ நடக்கும் நிகழ்வுக்கு அமெரிக்கா என்று பெயர் சொல்கிறார்களே...' என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், அமெரிக்காவில் வாழும் இந்தியப் பழங்குடியினரும் இங்கே தமிழர்கள் சந்திக்கும் பிரச்னையைத்தான் எதிர்கொண்டுவருகிறார்கள்!

ப்ளாக் ஃபீட்டைக் கவனிப்பாரா அமெரிக்க மோடி?

ட்ரம்பை, வேறு ஏதோ ஒரு தேசத்து அதிபராகவே பார்க்கிறார்கள் ப்ளாக் ஃபீட் பகுதி மக்கள். இங்கு பொருளாதாரமும் அதளபாதாளத்தில்தான் இருக்கிறது. ஆட்சியும் மக்களுக்குப் பயனளிப்பதாக இல்லை. அதனாலேயே இந்தச் சமூகம் ஏழ்மை நிலையிலேயே இருக்கிறது. இங்கு வாழும் மக்களின் வாழ்நாள் என்பது அமெரிக்க மக்களின் சராசரி வாழ்நாளைவிட 20 ஆண்டுகள் குறைவு. இதற்கிடையில், உணவுத் தட்டுப்பாடு, சர்க்கரை நோய் பாதிப்பு எனப் பல்வேறு சிரமங்களும் உண்டு. இன்னும் சொல்லப்போனால், ப்ளாக் ஃபீட்டின் சேர்மனே சர்க்கரைநோயினால் பாதிக்கப்பட்டவர்தான். இங்கு கடந்த வருடம் பிறந்த 196 குழந்தைகளின் அம்மாக்களில் 50 குழந்தைகளின் அம்மாக்கள் போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இன்றையச் சூழ்நிலையில், தமிழகக் கிராமங்கள் எப்படி இருக்கிறதோ அதனைப்போன்றதொரு நிலைதான் ப்ளாக் ஃபீட்டின் நிலையும். தமிழக மக்களுக்கு, மோடி என்பவர் 'இந்தியப் பிரதமர்' எனப் பத்திரிகைகளில் குறிப்பிடப்படும் ஒரு சாதாரணப் பெயராகத்தான் இருக்கிறார். தமிழக மது பிரச்னை குறித்து மோடி பேசாததைப் போலவே, மதுவின் பிடியில் சிக்கிக்கிடக்கும் ப்ளாக் ஃபீட் குறித்தும் இதுவரை ட்ரம்ப் எதுவும் பேசவில்லை. 

என்ன செய்கிறார் அமெரிக்க எடப்பாடி?

மூடப்பட்ட பென்சில் தொழிற்சாலை

1981 ஆம் ஆண்டு வரை ப்ளாக் ஃபீட்டில் ஒரு பென்சில் தொழிற்சாலை இருந்திருக்கிறது. இதன் 70 சதவிகித தயாரிப்புகள் அரசுக்காகவே செய்யப்பட்டன. இந்தத் தொழிற்சாலை மூடப்பட்ட பின்பு தொழில் வளர்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது. இந்தத் தொழிற்சாலையின் பின் பகுதியும், இங்குள்ள பாழடைந்த வீடுகளும் போதைப்பொருள் விற்கும் நிலையங்களாகவே உள்ளன. இங்குள்ள மதுபானக் கடைகள் எந்த நேரத்திலும், எதையும் விற்கும் இடமாக உள்ளன.

போதைப்பொருள் விற்பவர்களால் கொல்லப்பட்ட பெண் போலிஸின் நண்பர்

இப்பகுதியில், சமீபத்தில் பெண் போலீஸ் ஒருவரின் நண்பர் கொல்லப்பட்டிருக்கிறார். இதுகுறித்துப் பேசும் அந்தப் பெண் போலீஸ், ''இந்தப் பகுதியில், நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பாதுகாப்பதே பெரிய வேலை'' என்கிறார் மனம் வெதும்பியவராக. இங்கு மதுதான் பிரதானம்! இந்தப் பகுதி முழுவதுமே மதுவுக்கு அடிமையாகியிருப்பது குறித்து அமெரிக்க அரசாங்கம் கிஞ்சித்தும் கவலை கொள்ளவேயில்லை. கிட்டத்தட்ட தமிழ்நாட்டை நகல் எடுத்தது போன்ற நிலையில்தான் இந்தப் பகுதி உள்ளது. இந்தப் பகுதியிலும் சசிபெருமாள்கள் இருக்கிறார்கள்; ஆனால், கண்டுகொள்ளத்தான் யாருமில்லை!

கலைக்க முடியாத அரசாங்கம் :

24 மணிநேரமும் மது விற்பனையாகும் இடம்

இங்குள்ள பழங்குடியினருக்கான ஆணையத்தை மாற்றியமைக்கக் கோரி நடந்த வாக்கெடுப்பு சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆனாலும் ப்ளாக் ஃபீட் மக்கள் விடாமல் இன்னமும் நம்பிக்கையோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்களின் உத்திகளால் அரசாங்கம் தக்க வைக்கப்படுகிறது. ஆனால், அரசு என்பது மக்கள் மத்தியில் செயல்படாததாகவே உள்ளது. இந்த விஷயத்தில், தமிழகத்தோடு ஒப்பிட்டு விளக்க வேண்டிய அவசியமே இல்லை. ப்ளாக் ஃபீட் ஒரு நகலெடுக்கப்பட்ட தமிழ்நாடு!

விடிவுகாலம் :

ப்ளாக்ஃபீட்டை மீட்டெடுக்கும் மார்க் சக்கர்பெர்க்

“இந்த மக்களுக்கு நல்லது செய்யவேண்டும். முறையான மருத்துவம், கல்வி இவர்களைச் சென்றடைய வேண்டும். இவர்களின் வாழ்வாதாரத்தை எனது நிறுவனம் உயர்த்தும்” என்றெல்லாம் உறுதிகொடுத்து களமிறங்கியிருக்கிறார் ஃபேஸ்புக் ஓனர் மார்க் சக்கர்பெர்க். அமெரிக்க மாகாணப் பயணத்தின்போது இந்தப் பகுதியைக் கண்ட மார்க் இம்மக்களுக்கு உதவ முன் வந்திருக்கிறார். அவருக்கும் வருங்கால அமெரிக்க அதிபராகும்  கனவு இருக்கிறது போல! இது அதன் ஆரம்பமாக கருதப்பட்டாலும், ப்ளாக் ஃபீட்-டின் தலைவிதி மார்க்கால் மாறினால் மகிழ்ச்சி! தமிழகத்தின் மார்க் சக்கர்பெர்க் யார் என்ற கேள்விக்குத்தான் பதில் இல்லை....!