Published:Updated:

தமிழகம் செல்லவேண்டாம்: இலங்கை அரசு அறிவுறுத்தல்!

 தமிழகம் செல்லவேண்டாம்: இலங்கை அரசு அறிவுறுத்தல்!
தமிழகம் செல்லவேண்டாம்: இலங்கை அரசு அறிவுறுத்தல்!
 தமிழகம் செல்லவேண்டாம்: இலங்கை அரசு அறிவுறுத்தல்!

கொழும்பு: இலங்கையர்கள் மறு அறிவிப்பு வரும் வரை தமிழ் நாட்டுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசு தமது நாட்டு மக்களை அறிவுறுத்தி உள்ளது.

தமிழகம் வந்த இலங்கையைச் சேர்ந்த கால்பந்தாட்ட அணியினர்  முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.இந்நிலையில், நேற்று தஞ்சையை அடுத்த பூண்டி மாதா கோவிலுக்கு வந்த இலங்கை பயணிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதையடுத்து அவர்கள் சொந்த நாடு திரும்ப முடிவெடுத்துள்ளனர்.

##~~##
இந்த சூழ்நிலையிலேயே இலங்கையின் வெளியுறவு அமைச்சகம், மேற்கூறிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழகம் சென்றுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளது.அதேவேளை, தமிழ்நாட்டை தவிர்த்த ஏனைய இந்திய மாநிலங்களில் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு உள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.