Published:Updated:

விசா விதிமுறை தளர்வு ஒப்பந்தத்தில் இந்தியா-பாக். கையெழுத்து!

Vikatan Correspondent
விசா விதிமுறை தளர்வு ஒப்பந்தத்தில் இந்தியா-பாக். கையெழுத்து!
விசா விதிமுறை தளர்வு ஒப்பந்தத்தில் இந்தியா-பாக். கையெழுத்து!
விசா விதிமுறை தளர்வு ஒப்பந்தத்தில் இந்தியா-பாக். கையெழுத்து!

இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையே விசா வழங்குவதற்கான நடைமுறைகளை தளர்த்த வழி  வகை செய்யும் ஒப்பந்தம் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களான எஸ்.எம்.  கிருஷ்ணா மற்றும் ஹினா ரப்பானி கர் இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பின்னர்  கையெழுத்தானது.

இந்த புதிய விசா நடைமுறையால், ஒரு முறை தனிநபருக்கான விசாவில் தற்போதுள்ள  3 மாதத்துக்கு பதிலாக 6 மாத காலம் வரை தங்கியிருக்கலாம். 3 இடங்களுக்கு  மட்டுமே செல்ல வேண்டும் என்ற நிபந்தனை 5 இடங்களுக்குச் செல்லும் வகையில்  விரிவுபடுத்தப்படுகிறது.

முதியவர்கள், உறவினர்களை பார்க்க வரும் மக்களுக்கு இந்த விசா நடைமுறையால்  நல்ல பயன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக மூன்று நாள் பயணமாக பாகிஸ்தான் சென்ற இந்திய வெளியுறவுத்துறை  அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா,நேற்று அந்நாட்டு  அதிபர்  ஆசிப் அலி சர்தாரியை   இஸ்லாமாபாத்தில் நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது இரு நாடுகள் இடையிலான அமைதி நடவடிக்கைகளை முன்னெடுத்துச்   செல்வது குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.

##~~##
தீவிரவாதம் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.அத்துடன் பாகிஸ்தான்  பிரதமர் பர்வேஷ்  அஷ்ரப்பை எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்து இரு தரப்பு நல்லுறவு குறித்து  பேச்சுவார்த்தை  நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கவுரை,  கிருஷ்ணா இன்று சந்தித்தார்.அப்போது,இருவருக்கும் இடையே நடைபெற்ற  பேச்சுவார்த்தையை தொடர்ந்து மேற்கூறிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனிடையே இந்த பேச்சுவார்த்தையின்போது, பாகிஸ்தானில் மரண தண்டனை   விதிக்கப்பட்டுள்ள இந்தியர் சரப்ஜித் சிங்கை விடுதலை செய்வது குறித்து ரப்பானியிடம்   கிருஷ்ணா பேசியதாகத் தெரிகிறது.