Published:Updated:

பாகிஸ்தான் சிறையில் உள்ள 48 இந்திய மீனவர்கள் விடுதலை!

Vikatan Correspondent

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் உள்ள 48 இந்திய மீனவர்கள் விடுதலை  செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பாகிஸ்தான்  சென்றபோது, பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள் தண்டனைக்காலம்  முடியாவிட்டாலும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அதிபர் சர்தாரி  அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் கராச்சி சிறையில்  இருக்கும் 48 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இன்று காலை  விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள், லாகூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர்  அங்கிருந்து வாகா எல்லை வழியாக செவ்வாய்க்கிழமையன்று இந்தியா வந்தடைவார்கள்.

இந்திய நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட தகவலின்படி 428 பாகிஸ்தானியர்கள் இந்திய  சிறைகளில் இருக்கின்றனர். இவர்களில் 85 பேர் மீனவர்கள். இந்த மீனவர்களையும்  நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் மீனவர்  கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.