Published:Updated:

நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிக்கப்படுகிறன!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிக்கப்படுகிறன!
நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிக்கப்படுகிறன!

நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிக்கப்படுகிறன!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் நாளை முதல் வெளியிடப்பட உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசுகள் இலக்கியம், கலை, அறிவியல் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தோருக்கும் வழங்கப்படும். இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிக்கப்பட உள்ளன. ஓர் இறையாண்மை நாட்டிலுள்ள அரசாங்க உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக வேந்தர்கள், வரலாறு, தத்துவம், அரசியல், சட்டம் ஆகிய துறைகளின் பேராசிரியர்கள், அயல் உறவு துறைகள் உள்ள கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், அனைத்துலக நீதிமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், நார்வே நாட்டின் நோபல் கமிட்டியின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், நார்வே நோபல் கமிட்டியின் முன்னாள் ஆலோசகர்கள் போன்றோர் மட்டுமே நோபல் பரிசு பெற தகுதியானவர்களின் பெயரை பரிந்துரைக்கமுடியும்.

இதன் அடிப்படையில் யாருக்கு விருது வழங்குவது என்கிற ஆய்வு  எட்டு மாதங்கள் வரை நடக்கும். 5 நபர்களின் தலைமையிலான நார்வே குழு மட்டுமின்றி சர்வதேச ஆலோசகர்களும் இதில் பங்கு கொண்டு ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்து பின்னர் தகுதியான நபர்களுக்கு இப்பரிசை அறிவித்து வழங்குவர்.\

இந்தாண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு நாளையும், அக்டோபர் 3-ம் தேதி இயற்பியல், 4-ம் தேதி வேதியல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறைக்கு விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு