Published:Updated:

லண்டனில் மீண்டும் கைதாகி விடுதலையான விஜய் மல்லையா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
லண்டனில் மீண்டும் கைதாகி விடுதலையான விஜய் மல்லையா!
லண்டனில் மீண்டும் கைதாகி விடுதலையான விஜய் மல்லையா!

லண்டனில் மீண்டும் கைதாகி விடுதலையான விஜய் மல்லையா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணமோசடிப் புகாரிலிருந்து தப்பிக்க, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் தலைமறைவாக இருக்கிறார். இந்நிலையில், நேற்று லண்டனில் பணமோசடி வழக்கில்  அவர் கைதுசெய்யப்பட்டார். எனினும் கைதான உடனேயே அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் முதல் லண்டனில் தலைமறைவாக இருக்கிறார். இந்நிலையில் இந்திய அரசு, அவரை நாடு கடத்த முயன்றுவருகிறது. அப்படி கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட முயற்சியின்போது கைதான விஜய் மல்லையா, உடனடியாக விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, தற்போது லண்டன் நீதிமன்றத்தில் பணமோசடி வழக்கில் நேற்று மீண்டும் கைதுசெய்யப்பட்டார். ஆனால், கைதான உடனேயே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

விடுவிக்கப்பட்ட பின்னர் விஜய் மல்லையா, 'நான் எந்த நீதிமன்றத்தையும் ஏமாற்றவில்லை. இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டியது என் சட்டபூர்வமான கடமை. இங்கு இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. என் தரப்பு வாதங்களை எடுத்துரைக்க எனக்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. நான் எந்தக் குற்றமும் புரியவில்லை' என்று தெரிவித்தார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு