Published:Updated:

வானிலிருந்து பூமியில் விழுந்து அழியப்போகும் சீனாவின் கைவிடப்பட்ட விண்வெளி நிலையம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வானிலிருந்து பூமியில் விழுந்து அழியப்போகும் சீனாவின் கைவிடப்பட்ட விண்வெளி நிலையம்!
வானிலிருந்து பூமியில் விழுந்து அழியப்போகும் சீனாவின் கைவிடப்பட்ட விண்வெளி நிலையம்!

வானிலிருந்து பூமியில் விழுந்து அழியப்போகும் சீனாவின் கைவிடப்பட்ட விண்வெளி நிலையம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

Photo Courtesy: Adrian Mann/Bisbos.com

விண்வெளி ஆராய்ச்சியில் சாதித்துவரும் நாடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். விண்வெளி நிறுவனங்கள் நிறுவி, பெரிய அளவில் விண்வெளி ஆராய்ச்சிகள் செய்யும் நாடுகளின் பட்டியல் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா என்ற நான்கு நாடுகளுடன் நின்றுவிடுகிறது. இதில் சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்குச் சொந்தமான விண்வெளி நிலையங்கள் சில, பூமிக்கு மேல் மிதந்து கொண்டிருக்கின்றன.  அவற்றுள் சில, அவ்வப்போது பூமியில் விழுந்து நொறுங்குவது நடக்கும் நிகழ்வுதான். இதற்கு முன் ரஷ்யாவின் சால்யூட் 7 விண்வெளி நிலையமும்  நாசாவின் ஸ்கைலேப் விண்வெளி நிலையமும் இந்த முடிவைச் சந்தித்துள்ளன.

இந்த வரிசையில் தற்போது, சீனாவும் இணைய உள்ளது. Tiangong-1 என்ற அதன் விண்வெளி நிலையம், இன்னும் சில மாதங்களில் பூமியில் விழுந்து அழிய உள்ளது. சென்ற ஆண்டு சீனா வெளியிட்ட அறிக்கையில், தங்களால் இந்த விண்வெளி நிலையத்தைக் கவனிக்க முடியவில்லை எனவும், 2017-ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2018-ம் ஆண்டின் தொடக்கத்திலோ, இது பூமியின் மேல் விழலாம் என்றும் தெரிவித்திருந்தது. 8.5 டன் கனமிருக்கும் இந்த விண்வெளி நிலையம் பூமியை நோக்கி விழும்போது, மொத்தமும் பூமியின் வளிமண்டலத்தில் அழிந்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், இது பூமியில் விழுவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவும் தொடர்ந்து இதன் நிலைகுறித்து கவனித்துக்கொண்டுவருகிறது. பூமியில் விரைந்து விழுவதற்குத் தேவையான முடுக்கத்தையும் சீனா அளித்துவிட்டது. இருந்தபோதும், பூமியில் இந்த விண்வெளி நிலையம் எங்கே எப்போது விழும் என்பது கணிக்க முடியாததாய் இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு