Published:Updated:

ஐ.நா சபையின் புதிய உறுப்பினராக பாகிஸ்தான் தேர்வு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஐ.நா சபையின் புதிய உறுப்பினராக பாகிஸ்தான் தேர்வு!
ஐ.நா சபையின் புதிய உறுப்பினராக பாகிஸ்தான் தேர்வு!

ஐ.நா சபையின் புதிய உறுப்பினராக பாகிஸ்தான் தேர்வு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஐ.நா சபையின் புதிய உறுப்பினராக, பாகிஸ்தான் உள்ளிட்ட 15 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஐ.நா-வின் மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பினர் ஆவதற்காகப் பல நாடுகள் முன்னிறுத்தப்பட்டன. உறுப்பினர்களுக்கான தேர்தல், சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா சபையில் நடைபெற்றது. இந்தத் தேர்தலின்மூலம் உறுப்பினராகும் தகுதியை பாகிஸ்தான் உள்ளிட்ட 15 நாடுகள் பெற்றுள்ளன. 

பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், அங்கோலா, சிலி, ஆஸ்திரேலியா, காங்கோ, மெக்ஸிகோ, நேபாளம், நைஜீரியா, பெரு, கத்தார், செனகல், ஸ்லோவேகியா, ஸ்பெயின் மற்றும் ஆகிய நாடுகள் ஐ.நா-வின் மனித உரிமைகள் கவுன்சிலில் இடம்பெறத் தகுதியான நாடுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த 15 நாடுகளும், ஐ.நா-வின் மனித உரிமைக் கவுன்சிலின் உறுப்பினராக, வரும் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் 2020-ம் ஆண்டு வரை இந்த உறுப்பினர் பதவியில் இடம்பெறலாம் என்பது ஐ.நா-வின் விதிமுறை ஆகும். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை ஐ.நா-வின் பொதுச்சபை வெளியிட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு