Election bannerElection banner
Published:Updated:

மகள் திருமணத்துக்கு அழைப்பில்லை... ஃபேஸ்புக் லைவில் தந்தை தற்கொலை!

மகள் திருமணத்துக்கு அழைப்பில்லை... ஃபேஸ்புக் லைவில் தந்தை தற்கொலை!
மகள் திருமணத்துக்கு அழைப்பில்லை... ஃபேஸ்புக் லைவில் தந்தை தற்கொலை!

மகள் திருமணத்துக்கு அழைப்பில்லை... ஃபேஸ்புக் லைவில் தந்தை தற்கொலை!

ஒரு தந்தை முகநூல் வீடியோ வழியே உணர்ச்சிவேகத்தில் எடுத்த முடிவு, ஒரு குடும்பத்தையே  வாழ்நாள் முழுக்க கண்ணீர் சிந்தவைத்திருக்கிறது. கிழக்குத் துருக்கியில் இருக்கும் `யாவேஸ் செலிம்' என்ற ஊரைச் சேர்ந்தவர் அயான் உசன். மதுபானம் மற்றும் சாக்லேட் மொத்த விற்பனையாளர். 53 வயதாகும் உசனுக்கு, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன். கடந்த சில மாதங்களுக்கு முன், அவரது மனைவி அவரைவிட்டு குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டார். உசன், வசதியானவர்  என்றாலும் தனியாகத்தான் வசித்துவந்தார். இவரைவிட மாமனார் வசதியாக இருக்கிறார். மனைவியும் குழந்தைகளும் தன்னைவிட்டுப் பிரிந்து, மாமனாரின் வீட்டில் இருப்பது உசனுக்கு மிகப்பெரிய மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன் உசன் மனைவி அப்வர்,  ‛நம் மகளின் திருமணம் காலையில்  நடக்கவுள்ளது.  திருமணம் முடிந்து மாலை நடைபெறும் இனிப்பு விருந்துக்கு வாருங்கள்’ என  உசனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தகப்பனாகிய தனக்கு, திருமணத்துக்கு முதல்நாள் இரவு ஏதோ வேண்டா விருந்தாளியை அழைப்பதுபோல் அழைப்பது, மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது.

அதன் பிறகு நடைபெற்றதுதான் உலகை அதிரவைத்துள்ளது. நேற்று மகளின் திருமணம் நடைபெற்றது. அன்று இரவு 10:30 மணிக்கு தன் முகநூல் கணக்கில் வீடியோ லைவ் செய்யத் தொடங்கிய உசன் ``என் மகளின் வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சியான நாள். அதில்கூட என்னைப் பங்கேற்கவிடாமல் செய்துவிட்டனர். யாரையோ அழைப்பதுபோல் அழைத்து விழாவின் கடைசியாக நடைபெறும் நிகழ்ச்சிக்கு வரச் சொன்னார்கள். என் நண்பர்களுடன் நான் பகிர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு சில மணி நேரத்துக்கு முன்பாக தகவல் சொன்னார்கள். என் வேதனையெல்லாம், என் மகள்கூட தன் திருமணம் குறித்த தகவல்களை என்னிடம் பகிர்ந்துகொள்ளவில்லை என்பதுதான். அப்படி நான் என்னதான் செய்தேன் என்றே தெரியவில்லை.

என் மனைவியின் தந்தை உயிருடன் இருப்பதால், அவரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு என் மனைவி என்னை அழைக்கவில்லை. ஆனால், என் மகள் என்னைப் பொருட்படுத்தவேயில்லை. என் மகளின் திருமணம் குறித்து முடிவெடுக்க எனக்கு  உரிமை உள்ளது. திருமணச் சடங்கின்போது தந்தையிடம் ஒப்புதல் கேட்பார்கள். ஆனால், என் மகள் திருமணத்தின்போது என் மாமனாரிடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. தந்தை இல்லாத பிள்ளைகளுக்குத்தான் இப்படி நடக்கும். இப்படி ஆன பிறகு, நான் உயிருடன் இருப்பதில் எந்தப் பொருளுமே இல்லை. திருமணம் முடிந்த பிறகு என் குடும்பத்தார் என்னை வந்து பார்ப்பதாகச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் வந்து பார்க்கும்போது நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை. என் மகள் மீது நான் அதிக அன்பு வைத்திருந்தேன். கடவுள் உத்தரவிட்டு விட்டார். உங்களைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு கையில் இருந்த துப்பாக்கியினால் தலையில் சுட்டு ஆன்லைனில் வீடியோ ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும்போதே தற்கொலை செய்துகொண்டார் அயான் உசன். 

இந்த லைவ் ஓடத் தொடங்கியபோதே அவரின் நண்பர்கள் ஏதோ விபரீதம் நடக்கவிருப்பதை உணர்ந்து, கமென்ட் பாக்ஸில் வந்து தடுக்க முயன்றனர். ஆனால், அவர்  திடமாக முடிவெடுத்துவிட்டதால், அவரைத் தடுக்க முடியவில்லை. இப்படி ஒரு தற்கொலை லைவாக ஒளிபரப்பானது கண்டு உலகம் முழுவதும் உள்ள முகநூல் பயன்பாட்டாளர்கள் அதிர்ந்துவிட்டனர். சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அந்த வீடியோ நீக்கப்பட்டது. உசனின் முகநூல் கணக்கையும் இறந்தவர்கள் பட்டியலில் வைத்துவிட்டது. ஆனால், உசனுக்கு இன்னொரு முகநூல் கணக்கும் இருக்கிறது. அதில் முழுக்க முழுக்க அவர் தன் குடும்பத்தினருடன் இருக்கும் படங்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பார்க்கும்போது அவரின் மகள் ஒருமுறை தந்தையை திருமணத்துக்கு அழைத்திருக்கலாம் என்ற எண்ணம் எழுகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு